08 February, 2010 by admin
பிரித்தானியாவில் வெம்பிளி டவுன்காலில் நேற்றைய தினம் கவுன்சிலர்கள் கலந்து கொண்ட மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. பலமாவட்ட கவுன்சிலர்களும் மற்றும் பிரித்தானிய முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக சுயேட்சையாகப் போட்டியிட்ட ஜனனி ஜனநாயகம், பிரித்தானிய தமிழர்பேரவை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
தற்போதைய இலங்கை நிலைகுறித்தும் அத்துடன் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலைகள் மற்றும் நடந்த இன அழிப்புத் தொடர்பாக ஜனனி அவர்கள் உரையாற்றியிருந்தார். அத்துடன் கவுன்சிலர் மட்டத்தில் இப் பிரச்சனை அலசி ஆராயப்பட்டு ஒரு தெளிவுபடுத்தும் நிகழ்வாகவும் இது நடைபெற்றிருந்தது. லிபரல் டெமொகிரட் கட்சி, மற்றும் கான்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.