விரிவான செய்திகள்

 

67 வயதாகும் கனடா தாத்தாவின் காம லீலை- மருத்துவச் சான்றும் அம்பலம் !

21 April, 2012 by adminஇம்மாதம் 14ம் திகதி 16 வயதுச் சிறுமி ஒருவரோடு வவுனியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 67 வயதான, கனடா தாத்தா ஒருவர் தங்கியிருந்தார் என்ற செய்தியை அதிர்வு இணையம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது யாவரும் அறிந்ததே. குறிப்பிட்ட அச்சிறுமியை தாத்தா பாலியல் வன்புணர்வுக்கு ஈடுபடுத்தி இருந்தார் என்ற சந்தேகத்தில் அவர் கைதாகியிருந்தார். அவருடைய பொதிகளில் இருந்து செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் மேலைத்தேய விளையாட்டுப்பொருட்களும், மற்றும் காமத்தை தூண்டும் வயகரா மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து சந்தேகத்தின்பேரில் சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வவுனியா நீதவான் அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டிருந்தார். இதனை அதிர்வு செய்தியாக வெளியிட்டவேளை பல அழுத்தங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானது.

ஒரு தகப்பன் - மகள் என்ற ரீதியில் தான் இவர்கள் ஹோட்டலில் தங்கியிருந்தனர் என்றும், குறிப்பிட்ட அந்தத் தாத்தா அப்பெண்ணை நீண்டகாலமாகப் பராமரிக்கும் ஒரு நபர் எனவும் சொல்லப்பட்டது. சிங்களப் பொலிசார் தமிழ் தாத்தா மீது வேண்டும் என்றே சோடிக்கப்பட்ட வழக்கைப் போட்டுள்ளார்கள் என்று சில ஊடகங்கள், கொஞ்சம் கூட நாக்கூசாமல் எழுதியது. ஆனால் தற்போது சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதேவேளை பெண் மருத்துவரிடம் அச்சிறுமி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது அந்த 67 வயது தாத்தா தான் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கனடா குடியுரிமை பெற்ற 67வயதுடைய சண்முகம் கிருஷ்ணமூர்த்தி (யாழ்ப்பாண வதிவிட முகவரி 4/11 ஈச்சமோட்டை வீதி, யாழ்ப்பாணம்) என்பவரே 16 வயது ஏழைச்சிறுமி மீது பலமுறை பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளார் என வைத்திய பரிசோதனை அறிக்கைமூலம் தற்போது தெளிவாக்கப்பட்டுள்ளது. கனடா பிரஜா உரிமை பெற்ற 67 வயதுடைய சண்முகம் கிருஷ்ணமூர்த்தி அச்சிறுமியை பராமரித்து வந்த உறவினர்களுக்கு பணத்தை கொடுத்து, சிறுமியை வாங்கி பாலியல் பலாத்காரம் புரிந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சிறுமியின் பெற்றோர் வன்னி யுத்தத்தில் இறந்த பின்னர், உறவினரின் வீட்டில் வசித்து வந்த போது அச்சிறுமிக்கு உதவி செய்வதாக நடித்து பணத்தை கொடுத்து இத்துஷ்பிரயோகத்தை அவர் செய்துள்ளார் என விசாரணை நடத்திய வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. குறிப்பிட்ட சிறுமியின் கண்களுக்கு முன் அவரது தாய் தந்தையர் கொல்லப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து இன்னும் 3 வருடங்கள் கூட ஆகாத நிலையில், உதவுவதாகக் கூறி இவ்வாறு செய்துள்ளார் சண்முகம் கிருஷ்ணமூர்த்தி என்ற 67 வயது தாத்தா. போதாக்குறைக்கு செக்ஸ் டோய்ஸ் எனப்படும் காம விளையாட்டுப் பொருட்களையும் கனடாவில் இருந்து வாங்கிச் சென்றுள்ளார் இந்த தாத்தா !

அதனைக் கொண்டு முழுதாக வளர்ச்சியடையாத அச்சிறுமியை துன்புறுத்தியும் உள்ளார். இவரின் புகைப்படத்தை தெரிந்தவர்கள் தந்து உதவுமாறு அதிர்வு இணையம் வேண்டி நிற்கிறது.


தொடர்புகளுக்கு: athirvu@gmail.com
|    செய்தியை வாசித்தோர்: 109546

DMCA.com