விரிவான செய்திகள்

 

புலிகளின் உள்ளூர் தயாரிப்பு விமானம்: ஆராயும் இலங்கைப் படையினர் !

05 June, 2012 by admin

விடுதலைப் புலிகளை யுத்தரீதியாக வெற்றிகொண்ட இலங்கை இராணுவத்தினர், தொடர்ந்தும் பெரும் அதிர்சியில் திகைத்து வருகின்றனர். விடுதலைப் புலிகளிடம் சிலின் 143 ரக விமானங்கள் இரண்டு இருந்தது என்பது யாவரும் அறிந்தவிடையம். அவை பல தடவைகள் பறப்பில் ஈடுபட்டு தாக்குதலும் நடத்தியிருந்தது. ஆனால் சிலின் 143 ரக விமானத்தின் இயந்திரத்தை மட்டும் தருவித்து அதனைப் பயன்படுத்தி உள்ளூர் விமானத் தயாரிப்பில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தனர் என்ற, விடையங்கள் தற்போது கசிய ஆரம்பித்துள்ளது.

செக் நாட்டின் தயாரிப்பான இவ்வகை விமானங்களை, புலிகள் கொள்வனவுசெய்து அதனை எரித்திரியா நாட்டுக்கு எடுத்துவந்திருந்தனர் என்றும், பின்னர் அங்கிருந்து அதனை முல்லைத்தீவுக்கு கொண்டுவந்ததாகவும் இராணுவத்தினர் நம்புகின்றனர். சிலின் 143 ரக விமானத்தின் எஞ்சினை, புலிகள் தருவித்து உள்ளூரில் தயாரித்த விமானத்தில் பொருத்தி அதனை பறக்கவைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். செக் நாட்டின் தயாரிப்பான இந்த விமான எஞ்சினை, புலிகள் தமக்கு ஏற்றவாறு, சில மாற்றங்களையும் செய்துள்ளனராம். தேசிய தலைவரின், மகனின் வழிநடத்தலில் புலிகளின் தொழில் நுட்பப்பிரிவு ஒன்று இயங்கிவந்ததாகவும் அவர்களே இவ்வகையான உள்ளூர் விமானங்களை தயாரிக்க ஆர்வம் காட்டியதாகவும் மேலும் அறியப்படுகிறது.

புலிகளின் விமான தொழில்நுட்ப தளம் ஒன்றில் இருந்து, இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட சிலின் 143 ரக விமானத்தின் எஞ்சினையே, நீங்கள் படத்தில் காண்கிறீர்கள். இதனை இலங்கை விமானப்படையின் அதிகாரிகள் பார்வையிடுவதனையும், ஆராய்வதையும் படத்தில் காணலாம். விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப வளர்சியைக் கண்டு வியந்துபோயுள்ள இராணுவத்தினர், தாம் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை பரிமாறியபோது பெறப்பட்ட புகைப்படங்களே இங்கே இணைக்கப்பட்டுள்ளது.


|    செய்தியை வாசித்தோர்: 103081

DMCA.com