விரிவான செய்திகள்

 

இசைப் பிரியா மண்டையில் சுடப்பட்டே இறந்தார் புதிய ஆதாரம் வெளியானது !

23 June, 2012 by admin

புலிகளின் அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான இசைப்பிரியா கொலைசெய்யப்பட்டது தொடர்பாக பல புகைப்படங்கள் இதுவரை வெளியாகி இருந்தது யாவரும் அறிந்ததே. இருப்பினும் அவர் உடலில் ஆடைகள் களையப்பட்டு காணப்படும் புகைப்படங்கள் வெளியானதே தவிர, அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்து இதுவரை தெளிவான புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது கிடைக்கப்பெற்றுள்ள புகைப்படங்களை நோக்கும்போது ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் தலையில் இலங்கை இராணுவம் சுட்டுள்ளமை தெள்ளத்தெளிவாக காணப்படுகிறது. அவர் உடலைச் சுற்றி இலங்கை இராணுவத்தினர் நிற்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

கைகள் கட்டப்பட்ட நிலையில், அவரின் ஆடைகளைக் களைந்து சித்திரவதை செய்து, பின்னர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி இறுதியில் அவர் மண்டையில் சுட்டுள்ளனர் இலங்கை இராணுவத்தினர். முதுகிலும் மற்றும் பிறப்பு உறுப்பிலும் கடும் காயங்கள் இருப்பதும், இப் புகைப்படத்தில் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. இசைப்பிரியாவின் புகைப்படங்கள் வெளிவந்தவேளை, அவரை இலங்கை இராணுவம் கொல்லவில்லை எனவும், அவர் சண்டையில் இறந்திருக்கலாம் எனவும் கெகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது கைகள் கட்டப்பட்ட நிலையிலும், தலையில் சுடப்பட்ட நிலையிலும் அவர் உடல் காணப்படுவது குறித்து இலங்கை அரசு என்ன சொல்லப்போகிறது ? சர்வதேசம் இக் கொலை குறித்து கேள்விகேட்குமா ? இல்லை ஊடக அமைப்புகள் தொடர்ந்தும் மெளனம் சாதிக்குமா ?நன்றி: வாசுகி முருகதாஸ்
(புகைப்படங்கள்)


|    செய்தியை வாசித்தோர்: 52923

DMCA.com