விரிவான செய்திகள்

 

தமிழர்களின் காசை சுத்தி பின்னர் காஞ்சிபுரம் ஓடிய நபர்:

27 June, 2012 by admin

கோடை விடுமுறை ஆரம்பமாகவிருக்கும் இந் நாட்களில், பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் பல நாடுகளுக்குச் சென்று உல்லாசமாக இருப்பது வழக்கம். ஆனால் இம்முறை பல தமிழர்கள் தலையில் கையைவைத்துக்கொண்டு இருக்கும் சூழ் நிலை தோன்றியுள்ளது. ஆம நாம் ஏற்கனவே இது தொடர்பாக எழுதியிருந்தோம். குளோபல் ஏர் ரவல்ஸ் என்னும், நிறுவனத்தை தனபால் ராஜசேகர் என்னும் இந்தியர் ஒருவர் ஹாரோப் பகுதியில் ஆரம்பித்துள்ளார். தாம் விமான பயணச்சீட்டுகளை மலிவாகத் தருவதாக நாடகமாடிய இவரை நம்பி, பல தமிழர்கள் இவரிடம் விமான பயணச்சீட்டுகளை புக் செய்துள்ளனர். ஈ-ரிக்கெட் என்னும், இலத்திரணியல் விமான பயணச்சீட்டை மட்டும் கொடுத்து, பலரை ஏமாற்றிய ராஜசேகர்(சேகர்) தற்போது லண்டனில் இருந்து தமிழ் இந்தியாவில் உள்ள காஞ்சிபுரத்துக்கு தப்பிச் சென்றுவிட்டதாக அதிர்வு இணையம் அறிகிறது.

லண்டனில் உள்ள பல தமிழர்களிடம் பணத்தை வாங்கி, கடைசியில் ஆட்டையைப் போட்ட சேகரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இவர் சுமார் 150,000 (நூற்றி ஐம்பதாயிரம்) பிரித்தானிய பவுண்டுகளுடன் தலைமாறைவாகியுள்ளார். இதுவரை அறியப்பட்ட தொகையாக 150,000 கணக்கிடப்பட்டுள்ள போதும், இதனை விட அதிகமான அளவு பணத்துடன் இவர் தலைமறைவாகியுள்ளார் என, பிறசெய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இவர் தனது நிறுவனத்தை ஆரம்பித்தவேளை, சவுத்-ஹால் ரவல்ஸில், விமானச் சீட்டுகளை புக் செய்து, பின்னர் அதனைக் கொண்டுவந்து குறைந்த விலைக்கு தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது வழக்கம். இதனூடாகவே இவர் நிறுவனத்தில், விலை மலிவு என்றும் மக்கள் நம்பியுள்ளர்.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, அதி உச்ச விடுமுறை நேரத்தில், பலரிடம் காசை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு பயணச் சீட்டை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு சேகர் நாட்டை விட்டு தப்பியுள்ளார். இருப்பினும் ஈ-ரிக்கெட் என்று அழைக்கப்படும் இலத்திரணியல் ரிக்கெட்டை வைத்திருக்கும் நபர்கள், சவுத்-ஹால் ரவல்ஸிடம் தொடட்புகொண்டு, தமது விமான ரிக்கெட்டை தருமாறு கோரிக்கை விடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. காரணம் சவுத்-ஹால் ரவல்ஸ் நிறுவனம், அடோல்(ஆTஓள்) நிறுவன விதிகளுக்கு அமைவாக, தாம் வழங்கிய ஈ-ரிக்கெட்டுக்கு மதிப்பளித்தாகவேண்டும். எனவே ஏமாற்றப்பட்ட மக்கள், குறிப்பிட்ட இந்த நிறுவனத்தை அணுகுவது நல்லது.

மேலும் எதுவித ரிக்கெட்டுகளையும் பெறாமல், பணத்தை மட்டும் கொடுத்து ஏமாந்த தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பொலிசாரிடம் முறையிட்டால், அவர்கள் நடவடிக்கை எடுக்க வாய்பு இருக்கிறது. காரணம் இக் குற்றச்செயலானது 100,000 பவுண்டுகளைத் தாண்டியுள்ளதால், சேகரை கைதுசெய்ய இன்ரர்-போல் உதவியை நாடமுடியும். தற்போது காஞ்சிபுரத்தில் சேகர் தங்கியிருப்பதாக அதிர்வு இணையம் அறிகிறது. பெருந்தொகைப் பணத்தை பிரித்தானிய வங்கியில் இருந்து, தனது சொந்த ஊரில் உள்ள வங்கி ஒன்றுக்கு அனுப்பிவிட்டு, ராஜசேகர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.


|    செய்தியை வாசித்தோர்: 21421

DMCA.com