விரிவான செய்திகள்

 

முள்ளிவாய்க்காலில் சிக்காத முகமூடிப் பிரிவினர் !

11 August, 2012 by adminதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில், பல படையணிகளும் பிரிவுகளும் இருந்தது யாவராலும் அறியப்பட்ட விடையம். அறியப்படாத விடையம் ஒன்றை நாம் இங்கே பார்ப்போமா ?

இயக்கத்தில் உளவுப் பிரிவி, ஊடுருவும் படையணி, கண்ணிவெடிப் பிரிவு, மோட்டார் படையணி எனப் பல பிரிவுகளும் படையணிகளும் இருந்தது. புலிகள் படையணியில் ஒரு பிரிவு இருந்தது, அதனை முகமூடிப் பிரிவு என்று சொல்லுவார்கள். இப்படியொரு பிரிவு இருந்தது என்பது பலருக்குத் தெரியாது. புலிகளின் தலைவரின் நேரடி வழிகாட்டலில் இருந்த, இந்த முகமூடிப் பிரிவு தற்போது எங்கே ? இது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது !

விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள பல திறமையான போராளிகளில், சிலரை மட்டும் தேர்ந்தெடுத்த தலைவர் 1997ம் ஆண்டு முகமூடிப் பிரிவு என்ற ஒரு பிரிவை உருவாக்கினார். இவர்களுக்கு பிரத்தியேகமாக பல அசைன்மன்டுகள்(வேலைத்திட்டங்கள்) வழங்கப்பட்டது. இப் பிரிவில் உள்ளவர்கள், போராட்டத்தில் அதிகம் பங்குகொள்ளவில்லை. ஆனால் ஆயுதங்களைப் பற்றி நன்கு அறிந்துவை வைத்திருந்திருக்கிறாகள். வேறு நாட்டு உளவாளிகள், மற்றும் உள்நாட்டில் உள்ள சிங்கள உளவாளிகளோடு எப்படிப் பழகுவது, எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது போன்ற பயிற்சிகளை இவர்கள் பெற்றிருந்தனர். அத்தோடு மட்டுமல்லாது இவர்கள் காட்டில் பல காலம் வாழவும் ஆபத்து ஏற்படு சூழலில் தம்மை காப்பாற்றி, கிடைக்கும் பொருட்களை உணவாக்கி உண்டு மறைந்து வாழவும் சிறப்புப் பயிற்சிகளை எடுத்துக்கொண்டனர்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தொய்வு ஏற்படும் தருணத்தில், இல்லையேல் அவ்வியக்கம் பாரிய அழிவைச் சந்தித்தால் , அதன்பின்னர் மீண்டு எழ ஏதுவாக இப் பிரிவு செயல்படும் என்பதே தேசிய தலைவர் அவர்களின் திட்டமாக இருந்திருக்கிறது எனத் தற்போது அறியப்படுகிறது. தேசிய தலைவரோடு நின்று இப்பிரிவை உருவாக்கத் துணை நின்ற கலியுகன் என்னும் போராளி தற்போது பெயர் குறிப்பிடமுடியாத ஒரு நாட்டில் இருக்கிறார். அவர் அதிர்வு நிருபருக்கு அளித்தபேட்டியிலேயே மேற்கண்ட விடையங்களைத் தெரிவித்துள்ளார். இறுதியுத்தம் நடைபெறுவதற்கு முன்னதாகவே(பூநகரி வீழ்வதற்கு முன்னரே) முகமூடிப் பிரிவில் உள்ள பலர் தலைமையின் கட்டுப்பாட்டுக்கு அமைய வன்னிப் பரப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற அதிர்சித் தகவலும் வெளியாகியுள்ளது. அத்தோடு தாம் முள்ளிவாய்க்காலில் நின்றவேளை இப் பிரிவின் உறுப்பினர்கள் எவரையும் பார்க்கவில்லை என கலியுகன் மேலும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும் !


|    செய்தியை வாசித்தோர்: 117597

DMCA.com