விரிவான செய்திகள்

 

முன்நாள் தளபதி ராமை மாட்டி விட்டது யார் ? உடையும் குட்டுகள் !

16 August, 2012 by adminபுலிகளின் கிழக்கு மாகானத் தளபதிகளில் ஒருவராக இருந்த ராம், இலங்கை இராணுவத்தின் கைகளில் சிக்கினார் எனப்து யாவரும் அறிந்த விடையமே. ஆனால் இது தொடர்பாக பல அறியப்படாத விடையங்களும் உள்ளது. குறிப்பாக மே18ம் திகதிக்குப் பின்னர், புலிகளின் தளபதிகளில் யார் யார் மீதமாக உள்ளனர் என இலங்கை இராணுவத்தினர் கணக்குபோட்டுக்கொண்டு இருந்தனர். வடக்கில் புலிகளின் தலைவர்கள் பலரை இலங்கை இராணுவம் கொன்றும் சிறைப்பிடித்தும் இருந்தது. இதனால் அவர்கள் உடனே கிழக்கு மாகானத்தில் உள்ள புலிகள் தொடர்பாகவே கவனம் செலுத்தி வந்தனர். இந் நிலையில், புலிகளின் மூத்த தளபதிகளில் சிலர் கிழக்கில் மறைந்திருப்பது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மோப்பம் பிடிக்கப்பட்டது.

கிழக்கில் உள்ள காடுகளில் 2 அணிகளாகப் பிரிந்து, சில போராளிகளோடு ராமும், பிறிதொரு இடத்தில் சில போராளிகளோடு நகுலனும் மறைந்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். புலிகளின் திருகோணமலை மாவட்டத்தின் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த தவேந்திரன் என்னும் நபர், இராணுவத்தின் கைகளில் சிக்கிக்கொண்டார். இல்லையேல் அவருக்கும் இராணுவத்துக்கும் நீண்ட நாள் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. பல முறை வோக்கி- டாக்கி மூலம் தவேந்திரன் ராமை தொடர்புகொள்ள முயற்சி எடுத்துள்ளார். ஆனாலும் ராம் தொலைத்தொடர்பில் வரவில்லை. இதேவேளை ராமிற்கு கிடைத்துவந்த வழங்கல்கள் தடைப்பட்டது. ஆயுதங்கள் தான் வழங்கப்படவில்லை என்றால் பரவாயில்லை, உணவுக் கையிருப்புகளும் முடிவுற்றது.

இதனை அடுத்தே, ராம் மெல்ல மெல்ல தவேந்திரனோடு தொடர்புகொள்ள ஆரம்பித்தார். முதலில் உணவுகளை தமக்கு கொண்டுவந்து தருமாறு கூறியுள்ளார். இவர் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக ராம் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 20 கி.லே மீட்டர் தொலைவில் உள்ள இடத்துக்கு தவேந்திரன் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தார். முதற்கட்ட உணவுப் பொதிகள் சென்றடைந்ததும் மகிழ்ச்சியுற்ற ராம், பின்னரும் தொடர்புகொண்டு 2ம் கட்ட உணவுகளை வழங்குமாறு பணிக்க அதும் சிறப்பாக நடந்தேறியது. இந் நிலையில் தவேந்திரனை முழுதாக நம்ப ஆரம்பித்தார் ராம். சிறிது காலத்தின் பின்னர் 3ம் கட்ட உணவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பமானது. அப்போது தானும் கூடவருவதாகவும், தான் தவேந்திரனைப் பார்க்கவேண்டும் என்று ராம் கூறியுள்ளார்.

அப்ப தான், தகவலை தவேந்திரன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்களுக்குச் சொல்ல, அடர்ந்த காட்டுக்குள் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே ராமை சுற்றிவளைத்துப் பிடிக்க இலங்கை புலனாய்வு முழு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு சில போராளிகளோடு வந்த ராம், உணவைப் பெற்றுக்கொண்டு, செல்ல ஆரம்பமாகியுள்ளார். ராம் மற்றும் அவருடன் வந்த போராளிகளுக்கு சூடாக கொத்துரொட்டி வழங்கப்பட்டுள்ளது. அதைச் சாப்பிட்ட ராம் மற்றும் ஏனைய போராளிகளுக்கு வயிற்றைக் கலக்க ஆரம்பித்துள்ளது. சிலவேளை அதில் போடப்பட்ட இறைச்சி கெட்டுப்போய் இருக்கலாம் என்று தவேந்திரணால் கூறப்பட்டது. ராமுடன் வந்த போராளிகள் மலசலம் செல்ல மறைவான இடங்களைத் தேடிச்செல்ல, அங்கே பதுங்கி இருந்த இராணுவத்தினர் அவர்களைக் கைதுசெய்தனர். இருப்பினும் ராம் மயங்கி விழுந்துவிடார் என்று சொல்லப்படுகிறது.

இந் நடவடிக்கையின்போது, ராம் மற்றும் அவரோடு சென்ற போராளிகள் அனைவரும் கைதாகியுள்ளார்கள். பின்னர் ராம், நகுலனையும் இலங்கை இராணுவத்தின் வலைக்குள் சிக்கவைத்தார். ராமுடன் கைதான போராளி ஒருவர் தீராத நோய்ப் பிணி காரணமாக, மற்றும் அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்ற காரணத்தாலும் விடுவிக்கப்பட்டு, பெயர் குறிப்பிட முடியாத ஒரு நாட்டில் இருக்கிறார் . நுரையீரல் கான்சரால் அல்லலுறும் இப் போராளிகளின் குறிப்பில் இருந்து இச் செய்திகள் பெறப்பட்டுள்ளது.

ப.நடேசனின் சகோதரர் லூக்காஸ் லண்டனில் வசித்து வருகிறார் ! அவர் ராமுக்கு பெருந்தொகைப் பணத்தையும் அனுப்பியுள்ளார் ! மக்களிடம் சேகரிக்கப்பட்ட பணம் எவ்வாறு ராமுக்குச் சென்றது என்பது தொடர்பாக பரபரப்புத் தகவல் ஒன்று வெளியாக உள்ளது. மூத்த தளபதி ஒருவரின் மனைவியும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார். இச் செய்திகளும் விரைவில் வெளியாகும் !


|    செய்தியை வாசித்தோர்: 115887

DMCA.com