விரிவான செய்திகள்

 

சாஸ்திரியின் மூக்குச் சாத்திரங்கள் ஒரு பேப்பரில் !

09 September, 2012 by admin

லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு பேப்பரில் , மூக்கு சாத்திரம் பார்த்து எழுதும் நபர் ஒருவர் யார் என்று கேட்டால், சின்னப்பிள்ளை கூடச் சொல்லிவிடும் அது சாஸ்த்திரி என்று ! இவர் நாடுகடந்த அரசின் ஒரு அபிமானி. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊதுகுழல், தாமே தலைமைச் செயலகம் என்று சொல்லி அலைந்து திரியும் சங்கீதனின் அனுதாபி ! இந்த 3 விடையங்கள் குறித்து யாராவது எழுதினாலோ இல்லையேல் விமர்சித்தாலோ மூக்குச் சாஸ்திரி உடனே கெம்புவார் ! அவருக்கு உடனே களம் அமைத்துக்கொடுக்கும் 'ஒரு பேப்பர்' !

இதேபோலத்தான் சமீபத்தில் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்கள், நடைபெறும் மாகாணசபைத் தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்கவேண்டும் என்று ஒரு அறிவித்தலை விட்டுவிட்டார் ! இது அவரது சொந்தக் கருத்து ! கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத மூக்குச் சாஸ்திரி 'இரகசிய கடிதம்' , இல்லை லெட்டர்,... இல்லை இல்லை மடல் என்று வைச்சுக்கொள்ளுவோமே ,, அப்படி ஒன்றை ஒரு பேப்பரில் எழுதி இருக்கார் ! அதில் முன்நாள் எம்பியான ஜெயானந்தமூர்த்தி அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளார். கருணா விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தவேளை, ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தேசிய தலைவரின் படத்தை எரித்தார் என்றும், கொழும்பில் விடுதலைப் புலிகளால் வாங்கிக்கொடுத்த வீட்டை மீட்க அவர் மகிந்தருடன் டீல் போட்டார் என்றும், கருணா கிழக்கில் இருந்தவேளை வன்னிக்குச் செல்லாமல் ஜெயானந்தமூர்த்தி இருந்தார் என்றும் பல குற்றச்சாட்டுகளை மூக்குச் சாஸ்திரி முன்வைத்துள்ளார்.

மூக்குச் சாஸ்திரி யோசியம் பார்த்து எழுதியது 3 விடையம் தான் ! அதுவும் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த விடையமாம். கொஞ்சம் ரீவைன் பண்ணி பின்நோக்கி நகரவேண்டும். அப்ப கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்த காலகட்டம். அப்போது ...

*தேசிய தலைவரின் படத்தை ஜெயானந்தமூர்த்தி அவர்கள் மட்டக்களப்பில் எரித்துவிட்டாரம் !

*புலிகள் ஜெயானந்தமூர்த்திக்கு கொழும்பில் வாங்கிக்கொடுத்த வீட்டை தக்கவைக்க அவர் மகிந்தரோடு டீல் போட்டாராம்.

*நாடு கடந்த அரசை பிரித்துவிட்டாராம்.

இதில் எக்ஸ்ரா பிட்டிங் ஒன்றும் இருக்கு, மக்களே இதையும் ஒருக்கா கவனிக்கவேண்டும். அதாவது வன்னி சென்ற ஜெயானந்தமூர்த்தியை புதுக்குடியிருப்புக்கு கூட்டிக்கொண்டுபோனது சங்கீதனாம் ! மூக்குச் சாஸ்திரி கூறும் புதுக்குடியிருப்பு என்ன என்று விளங்குதா ? தலைவர் இருக்கும் இடமாம் ! அப்ப சங்கீதன் தலைவரின் ஆள்... அவரை எல்லாரும் ஆதரிக்கவேண்டும் என்ற விடையத்தையும் அவர் நாசூக்காகப் போடுகிறார் ஒரு பேப்பரில். ஒருபேப்பரில் இருக்கும் ஆசிரியருள் ஒருவரான கோபி அவர்கள் சங்கீதனையும் அவர் இயக்கும் தலைமைச் செயலகத்தையும் ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இல்லை என்பதனை சாஸ்த்திரி அறிவாரா ? சங்கீதன் 2009ம் ஆண்டு லண்டன் வந்து 2011ல் மாவீரர் தினத்தை 2 டாக உடைத்தது, எல்லோருக்கும் நினைவிருக்கும். தற்போது முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும் இரண்டாக உடைத்ததும் அனைவரும் அறிவார்கள்.

மேலும் சொல்லப்போனால், சங்கீதன் என்னும் பெயரை வைத்துக்கொண்டு அலையும் சங்கீதன் என்பது அவரது பெயரே இல்லை. உண்மையான சங்கீதன் வீரச்சாவடைந்துவிட்டார். லண்டனில் இருப்பது போலிச் சங்கீதன். இதுகூடத் தெரியாத மூக்குச் சாஸ்திரி, மூக்கு சாஸ்த்திரம் போட்டு சில கண்டுபிடிப்புகளை நடத்தி இருக்கிறார் என்றால் நாம் அதனை நம்ப முடியுமா.

தேசிய தலைவரது படத்தை நான் எரித்தேனே ? அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அடித்துக் கூறுகிறார் ஜெயானந்த மூர்த்தி. ஆதாரங்கள் உள்ளதா காட்டுங்கள் எனச் சவால் விடுகிறார். மற்றைய விடையம் கொழும்பில் உள்ள வீடு. சாஸ்திரி அவர்களே நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் அது புலிகளால் ஜெயானந்தமூர்த்திக்கு வாங்கிக்கொடுக்கப்பட்ட வீடு என்று. புலிகள் ஜெயனந்தமூர்த்தியை மதித்துத் தானே அந்த வீட்டை வாங்கிக்கொடுத்துள்ளார்கள். புலிகளின் சொத்தான அதனைக் காப்பாற்ற அவர் எதுவேண்டும் என்றாலும் செய்யலாம். ஏன் எத்தனை தடவை புலிகள் இலங்கை அரசுடன் பேரம்பேசி, சிறைக்கைதிகளை விடுவித்தார்கள். ஆப்பரேஷன் செக் மேட் நடவடிக்கையில் இந்திய இராணுவம் ஈடுபட்டு, தேசிய தலைவரை காட்டில் சுற்றிவளைத்தவேளை புலிகள் போட்ட டீலில் தான் பிரேமதாச இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கிழித்து , இந்திய இராணுவத்தை நாட்டைவிட்டு வெளியேற்றினார். !

இல்லை தெரியாமல் தான் கேட்கிறோம், மூக்குச் சாஸ்திரி அவர்களே, உங்களுக்கு ஒரு வீடு கொழும்பில் இருந்து அதனை சிங்கள அரசு எடுத்துக்கொண்டால் நீங்கள் என்ன அப்படியே பூ பறித்துக்கொண்டு இருப்பீர்களா ? அதனை எப்படி திருப்பிப் பெறலாம் என்று தானே முயற்சி செய்வீர்கள் ? என்ன இது கேணைத்தனமா எழுதுறீங்கள் ? அடுத்த விடையம் நாடு கடந்த அரசை இரண்டாகப் பிளக்க தான் ஜெயானந்தமூர்த்தி அதற்குள் போனாரா ? ஆஹா இதுமதிரி ஒருஜோக்கை நான் வாழ்க்கையில் கேள்விப்பட்டதே இல்லை. நீங்கள் 100 சந்தானத்துக்கு சமன் ! காமெடி பீசாக மாறி உங்களுக்கு இருந்த கொஞ்ச நெஞ்ச மதிப்பையும் குப்பையில் கொட்டிவிட்டீர்கள். ஏன் நாடு கடந்த அரசு பிரிந்தது ! அதனை ஒற்றுமைப் படுத்த சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் எவ்வாறு பாடுபட்டது ! அதில் முக்கிய இடத்தை வகித்ததே திரு.கோபிரட்ணம்(ஒரு பேப்பரின் நிர்வாகி மற்றும் ஆசிரியர்) என்பது போன்ற விடையங்கள் உங்கள் மூக்கு சாஸ்திரத்துக்கு எட்டவில்லையா சாஸ்திரி அவர்களே ? அரசியலும் தெரியாது ! ஆக்கபூர்வமாக எழுதவும் தெரியாது ! ஊர் ஞானமும் இல்லை !

சொல்புத்தியில், பிறர் சொல்லும் கதைகளை, இரவு தண்ணியடிக்கும்போது கேட்டுவிட்டு, காலையில் எழுந்து கட்டுரை எழுதினால் எப்படி இருக்கும் என்று உங்களைப் பார்த்து தான் நான் புரிந்துகொண்டேன் !

பிறரைப் பற்றி பந்தி பந்தியாக கட்டுரை எழுதும் சாஸ்திரி அவர்களே, உங்களுடைய பிளாக்ஸ் பாட்டில்(blogspot.co.uk) வியாபாரிகளால் வீழ்ந்த தலைவா என்று ஒரு கட்டுரை எழுதினீர்களே மறந்துவிட்டீர்களா ? தேசிய தலைவர் வியாபாரத்தில் ஈடுபட்டு வீழ்ந்தார் என்று கேவலமாக எழுதியது நீங்கள் தானே. தேசிய தலைவருக்கு விளக்குக் கொழுத்தியதும் நீங்கள் தானே ! அது சரி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த நீங்கள் ஏன் அவ்வியக்கத்தை விட்டு விலகினீர்கள் என்று சற்று சொல்லமுடியுமா ? பிறரை இவ்வளவு கேள்வி கேட்கும் நீங்கள் இந்தக் கேள்விக்கும் பதிலைச் சொல்லவேண்டும் அல்லவா ? சொல்லமுடியுமா உங்களால் ? கருணா கிழக்கு மாகாணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவேளை அங்கே ஏன் ஜெயானந்தமூர்த்தி இருந்தார் ? அவர் ஏன் வன்னிக்குச் செல்லவில்லை என்று நீங்கள் கேள்வி கேட்கிறீர்களே, அவர் அங்கே சில காலம் இருந்ததால் தான் வன்னித் தலைமைக்கு சில தகவல்களாவது கிட்டியது என்பதனை நீங்கள் அறியவில்லையா ?

தேசிய தலைமைக்கு விளக்கு கொழுத்திய நீங்கள் தேசிய தலைவர் படத்தை ஜெயானந்தமூர்த்தி எரித்தார் என்று பொய்யுரைப்பது வேடிக்கையான விடையம். அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால், நீங்கள் குறிப்பிடுவதுபோல அங்கே பல ஊடகவியலாளர்கள் இருந்தால் ஒருவர் கைகளிலுமா கமரா இல்லை ? குறைந்த பட்சம் மோபைல் போன்கள் கூடவா இல்லை ? இதற்கான புகைப்பட ஆதாரம் உங்கள் கைகளில் உள்ளதா ? ஆதாரம் இல்லாமல் அனுமானங்களில் குற்றம் சொல்லும் உங்கள் சாஸ்திரங்களை எவரும் நம்பத் தயார் இல்லை ! தமிழர்கள் போராட்டம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. புலம்பெயர் தமிழர்கள் தமது கைகளில் போராட்டங்களை எடுத்து நடத்திவரும் நிலையில், இதனைக் குழப்பும் வகையில் நீங்கள் எழுதும் கருத்துக்கள் அமைந்துள்ளது. இனியாவது ஆக்கபூர்வமாக கருத்துக்களை எழுதுவீர்கள் என நாம் நம்புகிறோம். கிழக்கு மாணாக சபை தேர்தலுக்காக இந்தியா தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கிய பெருந்தொகைப் பணத்தில் ஒரு பங்கு பிரான்சுக்கும் வந்துவிட்டதா ?

தர்க்கங்களால் வெல்ல முடியாமல் தோற்றுப்போகிறவன், அவதூறுகளை ஆயுதமாகக் கையில் எடுக்கின்றான்.

-மாமேதை சோக்கிரடீஸ்


|    செய்தியை வாசித்தோர்: 54836

DMCA.com