விரிவான செய்திகள்

 

உலகம் அறியாத புலிகளின் கருவிகள் !

09 October, 2012 by admin

உலகப் போர் வரலாற்றில், அமெரிக்க வல்லரசு முதற்கொண்டு சீனா, இந்தியா என்று பல நாடுகளை தம் பால் ஈர்த்த பெரும் திறமை புலிகளுக்கு உள்ளது. புலிகளின் போர் தந்திரம், அவர்கள் ஆயுதங்களை கையாண்ட விதம், உள்ளூரிலேயே அவர்கள் ஆயுதங்களை தயாரித்து அவற்றை பாவித்தது போன்ற விடையங்களே, மேற்குலகை கிலி கொள்ளவைத்தது எனலாம். அதிலும் அவர்கள் குறிப்பாக தாமே பல கருவிகளை தயாரித்து அதனைப் பயன்படுத்தியும் உள்ளனர். புலிகள் தரைப் படைப் பலம் அதிகரிக்க கடற்புலிகள் பெரிதும் உதவினார்கள். கடற்புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில் இலங்கை கடற்படையினர் பாரிய அழிவைச் சந்தித்தனர். இலங்கை கடற்படைக்குச் சொந்தமான அதிவேக தாக்குதல் படகுகளான டோரா படகுகள் பல மூழ்கடிக்கப்பட்டது.

கடலில் இரு தரப்பினருக்கும் இடையே நடக்கும் யுத்தத்தைப் பற்றித் தான் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் கடற்புலிகளோடு சண்டையிடும்போது அவர்கள் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியவில்லை என்றால், இலங்கை கடற்படையினர் உதவிக்கு, வான்படையை அழைப்பது வழக்கம். இப்படியான தருணத்தில் இலங்கை வான் படையின் உலங்கு வானூர்திகளோடும், கடற்புலிகள் பல தடவை சண்டையிட்டுள்ளனர். குறிப்பாக 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் கடற்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில், உலங்கு வானூர்தி ஒன்று சேதமடைந்துள்ளது. கடற்புலிகள் இலங்கை கடற்படையினரைத் தாக்கும்வேளை, புலிகளின் சுழியோடிப் பிரிவினர், பிறிதொரு அதிர்ச்சித் தாக்குதலை நடத்துவது வழக்கம். இவர்கள் பாவித்த கருவிகள் சில இதுவரை இலங்கை இராணுவத்திடம் சிக்கவில்லை. அதனை புலிகள் இலகுவாக விட்டுச் செல்லவும் இல்லை.

ஆனால் சமீபத்தில் கிடைத்த சில புகைப்படங்களும், புலிகளின் ஆழ்கடல் சுழியோடிகள் பிரிவில் இருந்த போராளி ஒருவர் சொன்ன தகவல்களையும், அதிர்வு இணையம் வெளியிடுவதில் பெருமையடைகிறது. முல்லைத்தீவில் உள்ள மறைவான இடம் ஒன்றில் வைத்தே சில தாக்குதல் கருவிகள், தயாரிக்கப்படுவது வழக்கம் என்றும், தளபதி சூசை அவர்களின் நேரடி வழிநடத்தலில் சில கருவிகள் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நீருக்கு அடியில், இல்லையேல் நீர் மட்டத்தோடு, மணிக்கு 180 மைல் வேகத்தில் செல்லக்கூடிய, தற்கொலை தகடுகள் என்று இதனை அழைப்பார்கள். மிகவும் தட்டையாக வடிவமைக்கப்பட்ட இக் கலங்களின் முன் முனையில் 3 உணர் கருவிகள் இருக்கும். இதில் ஏதாவது ஒரு பொருள் வீச்சுடன் மோதுண்டால், அதனுடன் பொருத்தப்பட்டுள்ள பாரிய வெடிகுண்டு வெடிக்கும்.

இவ்வகையான தற்கொலை தகடுகளை, இயக்க புலிகள் பல பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர். முழுக்க முழுக்க உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இவ்வகையான கருவிகளைப் பாவித்து பல கடற்படைக் கப்பல்களை புலிகள் வெற்றிகரமாகத் தகர்த்துள்ளார்கள். உலகம் அறியாத, பல நுற்பமான கருவிகளை புலிகள் கண்டுபிடித்து பயன்படுத்தி உள்ளனர். இருப்பினும், இலங்கை அரசு சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து வாடகைக்கும் மற்றும் அதி நவீன தொழில்நுட்ப்ப படகுகளைக் கொள்வனவு செய்த பிற்பாடே, புலிகள் சில இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டது என அப்போராளி மேலும் தெரிவித்தார். தாமே திரத்திச் சென்று, குறிப்பிட்ட ஒரு பொருளை அழிக்கும் ஏவுகணைகள் இருக்கும், அதே கால கட்டத்தில், தமது வளர்சிக்கேற்ப்ப அதே போன்ற சில கருவிகளை புலிகள், ஆசியாவின் ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒரு நாட்டில், தாமே தயாரித்துள்ளார்கள் என்றால், அது ஒட்டுமொத்த தமிழர்களுக்கே பெருமை சேர்க்கும் விடையமாக அமைந்துள்ளது அல்லவா !
|    செய்தியை வாசித்தோர்: 71881

DMCA.com