விரிவான செய்திகள்

 

கே.பியின் திரைமறைவுக் கும்பல்.... பெயர்கள் அம்பலம் [KP's cabal group]

28 October, 2012 by admin

இரகசிய ஈமெயில் ஒன்று அம்பலமானதால், பல விடையங்கள் வெளியாகியுள்ளதாக ஆங்கிலப் ஊடகமான கார்டியன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சில புலம்பெயர் தமிழர்களை அழைத்து தாம் சமரசம் பேசவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்தது. இதனை மகிந்தவே நடத்துவார் என்றும் அது தம்பட்டம் அடித்தது. இதனை அடுத்து பிரித்தானியா கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள், தாமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என வெளிப்படையாக அறிவித்தது யாவரும் அறிந்ததே. இந் நிலையில் கே.பி சில தமிழர்களுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகளை மேற்கொண்டுள்ளார். இவர்களில் உள்ள வெள்ளை ஆடு ஒன்று, (கறுப்பாடு இல்லை) இந்த மின்னஞ்சலில் ஒன்றை காப்பி எடுத்து, அப்படியே ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அனுப்பிவிட்டார். இதனை சாட்சியாக வைத்தே தற்போது பல செய்திகள் வெளியாகியுள்ளதாக ஸ்ரீலங்கா கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு கடந்த அரசில் இருந்து, நிதி அமைச்சர் இளையதம்பி, அவைத் தலைவர் பொன் பால்ராஜன், கனடாவில் இருந்து இன்பம், லண்டனில் இருந்து லேபர் பார்டி கவுன்சிலர் கணா, நோர்வேயில் இருந்து சர்வே, இதில் பங்குகொள்வதாக கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் இவர்கள் தான் ஒட்டுமெத்த புலம்பெயர் தமிழர்களின் தலைவர்கள் என்று நினைக்கிறது இலங்கை அரசு ! இல்லை இல்லை இப்படி ஒரு படம் காட்டப்பட்டுள்ளது. இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினால், புலம்பெயர் தமிழர்கள் தமது கோரிக்கையை கைவிட்டுவடுவார்களாம் ! மற்றது மகிந்தர் வெளிநாடு வந்தால் போராட்டம் நடத்தமாட்டார்களாம். இது எல்லாவற்றையும் நாங்க பாத்துகொள்ளுவோம் என்று இவர்கள் ஒரு 70MM படம் ஓட்டியுள்ளார்கள்போல. இதை டாரக்ட் பண்ணுவது கே.பியாம் !

இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக இணைத்து, இலங்கைக்கு அனுப்ப GTV இன் உரிமையாளர் செல்வி நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தார் என்ற செய்தியும் மின்னஞ்சலில் உள்ளதாக, ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக அரசாங்கத்தின் இரகசியப் பிரதிநிதி ஒருவர் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா சென்றுவந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதிர்வு இணையம், GTV உரிமையாளர் செல்வி அவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு இதுகுறித்துக் கேட்டது. திரு.செல்வி அவர்கள் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனக்கும் இப் பேச்சுவார்த்தைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேபோல லேபர் கட்சியின் கவுன்சிலர், தாம் தனது அம்மாவின் உடல் நிலை காரணமாகவே இலை செல்லவிருப்பதாகவும், இதனைப் பயன்படுத்தி சில ஊடகம் செய்தி வெளியிட்டுவிட்டது என்றும் கூறுகிறார்.

ஒரு காலத்தில் புலிகள் ஆதரவாளராக இருந்த நோர்வேயில் வசிக்கும் சர்வே தற்போது இலங்கை அரசின் சார்பாக இயங்குவது யாவரும் அறிந்த விடையம். ஆனால் நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் இதில் ஏன் கலந்துகொள்ளவேண்டும் என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இதேவேளை பிரதமர் ருத்திரகுமாரனுக்குத் தெரியாமல் தான் இச் சந்திப்பு நடைபெறவிருப்பதாகவும், வெளியான அந்த மின்னஞ்சலில் உள்ளதாக ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் பாரிய பின்னடைவை சந்திக்க 2006ம் ஆண்டில் இருந்தே கே.பி தான் காரணம் என அந்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 2006ம் ஆண்டில் இருந்தே, கே.பி இலங்கைப் புலனாய்வுத் துறையின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான கபில ஹந்தவிதாரண வுடன் தொடர்புகளில் இருந்துள்ளார். அவர் வழங்கிய பல தகவல் தான் புலிகள் அழிக்கப்பட ஏதுவாக இருந்தது என்பதனை எந்தத் தமிழர்களும் மறந்துவிடவில்லை.

மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டில், போனமுறையை விட மிகவும் கடினமான இலங்கைக்கு எதிரான தீர்மாணம் ஒன்றைக் கொண்டுவர மேற்குலகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் இருந்து தப்ப முடியாது என்பதனை உணர்ந்த இலங்கை தற்போது, புலம்பெயர் நாட்டில் உள்ள பல தமிழ் தலைவர்களையும், அமைப்புகளையும் வளைத்துப்போடும் குள்ளத்தனத்தை கையாண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாகவே கே.பியை சு.ப தமிழ்செலவன் அவர்களின் வீட்டில் அமர்த்தி, தேசிய தலைவர் பாவித்த ஒரு வீடை காரியாலயமாக்கி, புலம்பெயர் தமிழ் மக்களை கே.பி ஊடாக தம் பக்கம் இழுக்க முயற்சிகளை அது மேற்கொண்டு வருகிறது. கே.பி சு.ப தமிழ்ச் செல்வன் அவர்களின் வீட்டில் இருந்தால், தமிழ் மக்கள் என்ன அவரை நம்பி விடுவார்களா ? துரோகி என்றுமே துரோகிதான் !


|    செய்தியை வாசித்தோர்: 90490

DMCA.com