விரிவான செய்திகள்

 

வீடு சுற்றிவளைக்கப்பட்டது: விநாயம் கைதானார்: பின்னணி என்ன ?

17 November, 2012 by admin

பிரான்சில் கொல்லப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் கேணல் பரிதியின் கொலைகோடு சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்து புலிகளின் முன் நாள் உறுப்பினர் விநாயம் கைதாகியுள்ளார். இச் செய்தியை நாம் ஏற்கனவே நேற்றைய தினம் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டு இருந்தோம். ஏன் எனில் இதனை நேற்று உறுதிசெய்ய முடியவில்லை. இதோ மேலதிகத் தகவலோடு சில செய்திகளை நாம் வெளியிடுகிறோம். ஆனால் அதற்கு முன்னர் யார் இந்த விநாயம் ? இவர் எந்தக் குழுவை புலம்பெயர் தேசத்தில் உருவாக்க முற்படுகிறார் என்று நீங்கள் அறிந்துகொண்டால் நல்லதல்லவா ? சரி வாருங்கள் சில விளக்கங்களை இங்கே தருகிறோம் ! பின்னர் கைது பற்றி மேலதிகச் செய்திகளை வாசியுங்கள் !

விநாயகத்தின் உண்மையான பெயர், கதிர்காமத்தம்பி வைரமூர்த்தி ஆகும். புலிகள் 2009ல் பாரிய பின்னடைவை சந்தித்தவேளை, அதில் இருந்து மீளவும் இராணுவத்தின் தாக்குதல்களை மட்டுப்படுத்தவும் ஒரு திட்ட வரைபடத்தை வரைந்து, அதனை செயல்படுத்துமாறு விநாயகத்திடம் தெரிவித்தனர். அவரை பாதுகாப்பாக கொழும்புக்கும் அனுப்பிவைத்தனர். கொழும்பில் இருந்துசெயல்படவேண்டிய விநாயகம் அந்த திட்ட வரைபடத்தை நிலத்தில் போட்டுவிட்டு, அப்படியே இந்தியாவுக்கு தப்பியோடிவிட்டார். சிங்கள உளவாளிகளே இவரை தப்பவைத்தனர் என்றும் கூறப்படுகிறது. பின்னர் தென்னாபிரிக்கா சென்று, அங்கிருந்து பிரான்ஸ் வந்து தஞ்சமடைந்தார் விநாயம். ஊரில் புலிகள் யுத்தரீதியாக வெல்லப்பட்ட பின்னர், இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, தாமே புலிகளின் தலைமைச் செயலகம் என்று அறிவித்தார் விநாயகம். இலங்கை அரசிடம் சரணடைந்து பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய மேலும் சில நபர்களைச் சேர்த்து இவர் தொடங்கிய குழு தான் புலம்பெயர் தேசத்தில் மாவீரர் தினத்தை 2 டாக உடைக்க காரணமாக அமைந்தது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக, புலம்பெயர் நாடுகளில் இயங்கிவந்த புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பினை இவர்கள் உடைக்கவேண்டும் என்று இலங்கை அரசோடு இணைந்து திட்டங்களை தீட்டிச் செயல்பட்டனர் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் அப்போது பலமாக இருக்கவில்லை. இப்போது பரிதி கொலையில், இலங்கை அரசு நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளது என்ற கோணத்தில் பிரெஞ்சுப் பொலிசார் விசாரணைகளை நடத்திவரும் நிலையில், தலைமைச் செயலகம் தாம்- தான் என்று கூறிவரும் அதன் தலைவர் விநாயகம் கைதுசெய்யப்பட்டுள்ளார். இக் குழுவினரே லண்டனில் எக்ஸெல் மண்டபத்தில் நடக்கவிருக்கும் மாவீரர் தினத்துக்கு எதிராக போட்டி மாவீர் தினத்தையும் அறிவித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாம் முன் நாள் போராளிகள், தாமே தலைமைச் செயலகம் என்று சொல்லி லண்டன் மற்றும் பிற நாடுகளில் பல குழப்பங்கள் ஏற்பட காரணமாக இருந்தவர் விநாயம். அவரோடு லண்டனில் சேர்ந்து இயங்கிய நபர்களில் சங்கீதன் மற்றும் தும்பன் ஆகியோரும் அடங்குவார்கள். இவர்களை GTV போன்ற சில ஊடகங்கள் முன் நிலைப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்க விடையமாகும்.

தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் வெளிநாடுகளில் செயல்பட சர்வதேச கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டது. இதில் TCC யும் அடங்கும். இதுபோன்ற தேசிய தலைவரின் நேரடி வழிகாட்டலில் இயங்கிவந்த அமைப்புகளை உடைக்கவேண்டும் என்று விநாயகத்துக்கு யார் சொல்லிக் கொடுத்தது ? அதனைச் செய்ய அவர் எவ்வாறு துணிந்தார் என்ற கேள்விகளுக்கு இப்போது விடைகிடைத்துவிட்டது. கேணல் பரிதி கொலையில் ஏற்கனவே கைதான 2 நபர்கள் கொடுத்த வாக்குமூலத்துக்கு அமைவாகவே, விநாயகம் கைதானார் என்று பிரான்ஸ் செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இச் செய்தியை பிரசுரிக்கவேண்டாம் என பலர் அதிர்வுக்கு ஏற்கனவே அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளார்கள். உண்மையை மறைக்க முடியுமா ?

விநாயகத்தின் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் நிரூபனமானல், அக் குழுவைச் சார்ந்த அனைவரும் இதற்கான பதிலைச் சொல்லியே ஆகவேண்டும் என்ற நிலை தோன்றும். நேற்று(16) அதிகாலை சுமார் 5.00 மணியளவில் 20 பேர்கொண்ட பிரான்ஸ் புலனாய்வுக் குழு ஒன்று, விநாயகத்தின் வீட்டை சுற்றிவளைத்துள்ளது. குறிப்பிட்ட வீதியைக் கூட போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டு இந்தக் கைது நிகழ்ந்ததாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை அரசோடு தொடர்ச்சியாக தொடர்பில் விநாயகம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. கொலைசெய்ததாக கைதாகியுள்ள 2 முக்கிய நபர்களில் ஒருவருக்கு, இலங்கை அரசு ராஜதந்திரிகளுக்கான பாஸ்போட்டை வழங்கவிருந்தது என்றும், அதனூடாகவே அவர் பிரான்சில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டார் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் பிரான்சில் கொல்லப்பட்ட கேணல் பரிதியின் வீரச்சாவு தமிழீழ மக்களை எழுச்சியுறவைத்துள்ளது. இலங்கை அரசின் பயங்கரவாதத்தையும், அவர்களோடு சேர்ந்து இயங்கும் குழுவையும் தமிழர்கள் தற்போது துல்லியமாக அடையாளம் கண்டுவிட்டனர். இம்முறை எக்ஸெல் மண்டபத்தில் நடைபெறும் மாவீரர் தினத்துக்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் எழுச்சியுடன் இம் முறை மாவீரர் தினம் நடைபெறவுள்ளது.


|    செய்தியை வாசித்தோர்: 153914

DMCA.com