விரிவான செய்திகள்

 

கலர் கலரா உடுப்புபோட்டு வந்து கலக்கிய நா.க உறுப்பினர்கள்:

01 December, 2012 by adminநாடு கடந்த அரசின் 4 வது அமர்வு லண்டனில்
நடைபெற்றது. இதற்கு முன்னதான அமர்வுகள் அமெரிக்காவில் உள்ள எருமை நகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடையம். இம் முறை இந்த அமர்வுகள் பிரித்தானிய பாராளுமன்றின் வளாகத்தினுள் நடைபெற்றது. அதன் உறுப்பினர்கள் கலர் கலரா உடுப்பு போட்டு வந்து பார்வையாளட்களை அசத்தியுள்ளார்கள். உறுப்பினர்களுக்கு ஒரு கலர் உடுப்பு.... அமைச்சர்கள் மற்றுமொரு கலர்... செனட் சபை உறுப்பினர்கள் ஒரு கலர் என்று, வித்தியாசம் வித்தியாசமான ஈஸ்மன் கலரில் இவர்கள் வந்து கலக்கினார்கள். ஆனால் இலங்கை அரசு கலங்கியுள்ளதாக என்று கேட்டால் அது தான் இல்லை. இதிலும் கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்த அங்கத்தவர்கள், பிரித்தானிய பாராளுமன்றம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று, முழு நேரப் புகழ் பாடினார்களே தவிர தமிழர்களுக்கு என்ன தீர்வு என்று, இல்லையேல் தமது நிலைப்பாடு என்ன என்று தெளிவுபடுத்த மறந்துவிட்டார்கள்.

வழமைபோல நாடு கடந்த அரசு , அதனைச் செய்யும், இதனைச் செய்ய இருக்கிறது என்று சொல்லி கூட்டத்தை அப்படியே முடித்துவைத்தனர். நாடு கடந்த அரசின் அவைப் பேச்சாளர் GTV க்கு ஒரு நேர்காணலையும் வழங்கியிருந்தார். அதில் திரு.தினேஷ் அவர்கள் இடக்கு முடக்கான கேள்விகளைக் கேட்டுவிட்டார். உங்களுக்கும் தலைமைச் செயலகம் என்று சொல்லப்படும் சங்கீதன் கோஷ்டிக்கும் தொடர்பு இருப்பதாகப் பேசப்படுகிறதே உண்மையா ? என்று கேட்டுவிட்டார். சீறிப் பாய்ந்த அவைப் பேச்சாளர் பொன் பால்ராஜ், எமது தலைவர் உரைக்கு மதிப்புக்கொடுக்காத எவருடனும் நாம் சேரமாட்டோம் என்று சொன்னார். தலைவர் என்றால் யார் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களையா சொல்கிறீர்கள் ? என்று கேட்க்க, இல்லை இல்லை திரு ருத்திரகுமாரனை நான் சொல்கிறேன் என்றார் திரு.பொன் பால்ராஜ் அவர்கள்.

அப்படி என்றால், ருத்திரகுமாரன் என்ன தேசிய தலைவருக்கு சமமானவரா ? என்று அடுத்த கேள்வியும் கேட்க்கப்பட்டது. இல்லை இல்லை, ஆனால் பத்தோடு பதின் ஒன்றாக அவருக்கும் மரியாதை கொடுக்கவேண்டும் என்று சமாளித்தார், பொன் பால்ராஜ் அவர்கள்.

இதில் வேடிக்கையான விடையம் என்ன தெரியுமா ? பாமர மக்கள் சிலர், குறிப்பிட்ட கூட்டத்துக்குச் சென்றுள்ளார்கள். வெளியே வந்த அவர்கள், ஏன் நாடு கடந்த அரசின் கூட்டத்தில் இத்தனை ஆயர்மார் கலந்துகொள்ளவேண்டும். கத்தோலிக்க ஆயர்மார்களுக்கும் நாடு கடந்த அரசுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அட கடவுளே நாடு கடந்த அரசின் உறுப்பினர்கள் தான் இவ்வாறு கத்தோலிக்க ஆயர் போல கலர் கலரா உடுப்பு போட்டுள்ளார்கள் என்று யாராவது சொல்லியிருக்கலாம் அல்லவா ? என்ன கொடுமை சரவணா ?

அதிர்வுக்காக:-

வல்லிபுரத்தான்.


|    செய்தியை வாசித்தோர்: 82682

DMCA.com