விரிவான செய்திகள்

 

28 நாளாக கப்பல் விடும் சம்பந்தன் ஐயா அவர்கள் !

27 December, 2012 by adminபாராளுமன்றில் புலிகள் பயங்கரவாதிகள் என்று, சிங்களவர்களுக்கு முன் பேசி பலத்த கைத்தட்டலைப் பெற்ற சம்பந்தன் ஐயா மீது உலகத் தமிழர்கள் கடும் அதிருப்தியில் உள்ளார்கள். இதனைப் புரிந்துகொண்ட அவரது ஆதரவாளர்கள் சிலர், அவருக்கு பக்கா ஐடியா ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அது என்னவென்றால், கைதுசெய்யப்பட்ட பல்கலைக் கழக மாணவர்களை விடுவிக்கக்கோரி வழக்குத் தொடர்வது என்று அறிவியுங்கள், உங்கள் மீது சுமத்தப்பட்ட பழிக்கு இது தற்காலிக நிவாரணியாக இருக்கும் என்பது தான் ! அதாவது அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம், மாணவர்களைக் காக்க முடியும் என்று தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தாம் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் , ஏற்பாடுகள் நடைபெறுகிறது என்று கூறிக்... கூறியா இவர்கள் காலத்தை கடத்திவருகிறார்கள். அதாவது மக்களுக்கு ஒரு விடையம் நன்கு புரியவேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை, ஒருவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால்.... 28 நாட்களுக்குள் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்யவேண்டும். அதற்கான கால அவகாசம் வரும் ஞாயிற்றுக்கிழமையோடு(30) முடிவடைகிறது என்பது அதிரவைக்கும் தகவலாகும் !

எனவே வெள்ளிக்கிழமை(28) இந்த வழக்கைப் பொடாவிட்டால், பின்னர் திங்கட்கிழமை தான் இவ்வழகைப் போடக்கூடிய நிலை இருக்கிறது. அப்படி என்றால் இவர்கள் போடும் அடிப்படை உரிமை மீறல் மனுவை, நீதிமன்றம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏன் இவ்வாறு காலத்தை கடத்தவேண்டும் என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது. இலங்கையின் சட்ட வரைமுறைகள் இவர்களுக்குத் தெரியாதா ? இல்லை தெரியாதவர்கள் போல சம்பந்தன் ஐயாவின் கோஷ்டியினர் நடிக்கிறார்களா ? இலங்கை மனித உரிகைகளுக்கான ஆய்வு மையத்தின் இணையத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பாக மிகவும் தெளிவான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனையும் மக்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

இதேவேளை சனிக்கிழமை, தம்மை வந்து சந்திக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்கள். எனவே கஜேந்திரகுமார் மீது விசாரணைகளை நடத்தி, அவரை 2 தினங்களுக்கு முடக்கி வைக்க இலங்கைப் புலனாய்வுத் துறை முஸ்தீப்புகளை மேற்கொண்டுள்ளது. அதாவது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், சிலவேளைகளில் தாமே அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்யக்கூடும் என்று புலனாய்வுத் துறையினர் கணக்குபோட்டிருப்பார்கள். எனவே தான் குற்றப்புலனாய்வுத் துறையினர் அவரை விசாரிக்கவேண்டும் என்று தற்போது கட்டளையிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அதாவது ஒரு செயலை (நாம் குறிப்பிடுவது ..அடிப்படை உரிமை மீறல் மனுவை) நேர்த்தியாகச் செய்யக்கூடிய ஒருவரைச் செய்யவிட்டால், அவர் அதனைச் செய்து முடிப்பார். ஆனால் அதனை தாமே செய்வோம் என்று முதலில் அறிவித்துவிட்டு, அதனைக் கையில் எடுத்துக்கொண்டு, பின்னர் காலத்தைக் கடத்திவருவது ஒரு யுக்தியாகும். இது சிங்களவருக்கே பயன் தரும் விடையமும் கூட. இப்படி ஒரு மாஸ்டர் பிளானைப் போட்டு தான் சம்பந்தர் ஐயாவின் கொஷ்டி செயல்பட்டு வருகிறதா ? என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது.

இச் செய்தியை வாசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்குள், ஒருவராவது சம்பந்தன் ஐயாவின் கோஷ்டியுடன் நெருக்கமாக இருப்பார். அவராவது இவ்விடையத்தைச் சொல்லி ஞாயிற்றுக் கிழமைக்குள் அடிப்படை உரிமை மீறல் மனுவை போடச் சொல்லுவார் என்ற ஒரு நப்பாசையில் தான் இதனை நாம் எழுதுகிறோம் ! பல மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடவேண்டாம் ! அவர்கள் எதிர்காலமே கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ள நிலை தோன்றியுள்ளது. பல்லாயிரம் தமிழ் இளையோர்கள் அழிக்கப்பட்டுள்ளார்கள். இந் நிலையில் விவேகம் மிக்க இந்த தமிழ் இளையோர்களையும் நாம் இழந்துவிடக்கூடாது. இவர்கள் வாழ்கைக்கு மேல் நின்றுகொண்டு அரசியல் நடத்தவேண்டுமா ? அப்படி நடத்தினால் உங்களை விட மிகமோசமான அராசில்வாதி யாராக இருக்க முடியும் ?

அதிர்வுக்காக :

வல்லிபுரத்தான்.


|    செய்தியை வாசித்தோர்: 94257

DMCA.com