விரிவான செய்திகள்

 

இன்று தொடக்கம் கோட்டபாயவை அமெரிக்கா உளவு பார்க்கலாம் !

02 January, 2013 by admin2013 ம் ஆண்டு தமிழர்களுக்கு எப்படி அமைபய்போகிறதோ தெரியவில்லை என்று அவர்கள் ஒருபுறம் ஏங்கிக்கொண்டு இருக்க, நிச்சயமாக இது ஒரு நல்ல சமிஞ்சை இல்லை என்று நினைத்திருப்பார் கோட்டபாய ராஜபக்ஷ. இன்றில் இருந்து கோட்டபாயவை உளவு பார்க்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு சர்வசாதாரணமாகிவிட்டது அப்பா ! இதனை கோட்டபாய, கட்டிலில் படுத்து உருண்டுகொண்டு யோசிக்கவேண்டிய நிலை தோன்றியுள்ளது ! கூடப் புதிர்போட விரும்பவில்லை ! சரி வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !

அமெரிக்காவில் புதிய சட்டம் ஒன்றை அன்நாட்டு அரசு அமுல்படுத்தி உள்ளது. அமெரிக்க பிரிஜையாக அல்லது அமெரிக்க வதிவிட உரிமை அல்லது கிறீன்காட் உள்ளவர்கள் வெளிநாடுகளில் அல்லது வெளிநாட்டு உளவுத்துறையுடன் தொடர்பு வைத்திருத்தல் அவர்கள் தொடர்பாக உளவு பார்க்க, அமெரிக்க நீதிமன்றில் முன் அனுமதி எடுக்கத்தேவையில்லை என்பதே அதுவாகும். தொலைபேசி உரையாடல், மின்அஞ்சல்கள் நடமாட்டங்கள், போக்குவரத்துகளை அமெரிக்க உளவுத்துறையோ, அல்லது அமெரிக்க உளவுத்துறையின் முகவர்களோ எந்தவிட சட்ட முன் அனுமதியும் இல்லாமல் கவனிக்கவும் கண்காணிக்கவும் பின்தொடருவும் முடியும். ஒரு நபரை உளவு பார்க்க கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டுள்ள நாடாக அமெரிக்கா திகழ்கிறது. ஆனால் இன்று முதல் அமுலுக்கு வரும் இச் சட்டத்தால், இலங்கையில் உள்ள சில நபர்கள் ஆடிப்போயுள்ளார்கள்.

கோட்டபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, சரத் பொன்சேகா மற்றும் பல அமைச்சர்கள் அரசியல்வாதிகளும் அடங்குவர். ஏன் எனில் இவர்கள் அனைவரிடமும் அமெரிக்க கிரீன் காட் உள்ளது. இன்ரர்நெட் உலகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்கா, கூகுள் ஜாகூ போன்ற தேடுபொறி மற்றும் மின்னஞ்சல் சேவை வழங்குனர்களையும் தமது கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்கிறது(இல்லை என்று கூறிக்கொண்டாலும் இவை எல்லாமே அமெரிக்க நலன் சார் கம்பெனிகள் தான்) எனவே இனிவருங்காலங்களில் கோட்டபாய அனுப்பும் மின்னஞ்சல்களை அமெரிக்கா ஊடறுத்து, அதில் உள்ள விடையங்களை வாசிக்க முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது. இலங்கை அல்லாது, அமெரிக்க நேசநாடுகளுக்கு கோட்டபாய பிரயாணம் மேற்கொள்ளும்போது, அவருடைய தொலைபேசி உரையாடல்களை ஒட்டிக்கேட்க்கவும் முடியும்.

அமெரிக்க ஏஜண்டுகளைப் பொறுத்தவரை, இது தண்டனைக்குரிய குற்றமாகாது. இதனூடாக அமரிக்க வீசாவுடன் நடமாடும் இலங்கை பெரும் தலைகளாக பொன்சேகா பாகிஸ்தானுக்கு போனாலோ அல்லது சீனாவுடன் இரகசிய டீல் போட்டாலோ, அல்லது கோட்டபாய ஈரானுடன் அல்லது ரஷ்யாவுடன் அல்லது சீனாவுடன் என்ன செய்கிறார் என்பதை அமெரிக்க உளவுத்துறை அப்படியே கவனித்துக்கொண்டு இருக்கும் நிலை தோன்றியுள்ளது. இவ்வாறு பெறப்படும் உளவுத்தகவலை வைத்து இவர்களுக்கு எதிராக அமெரிக்க உளவுத்துறை வழக்கு தாக்கல் செய்து சிறையில் அடைக்கவும் சித்தரவதை செய்யவும் சட்டம் இடம் கொடுத்துள்ளது. இதில் இருந்து எப்படி தப்பப்போகிறோம் என்று ரூம்போட்டு யோசிக்கவேண்டிய நிலை தோன்றியுள்ளது !


|    செய்தியை வாசித்தோர்: 72436

DMCA.com