விரிவான செய்திகள்

 

வெட்டிக் கொல்லப்பட்ட நபரின் காணியில் கிளைமோர் குண்டு கண்டு பிடிப்பாம் !

02 January, 2013 by admin

பியகம விலேஜ் என்ற விடுதியின் உரிமையாளர் பேர்னாட் ஜயரத்ன வெட்டிக்கொலை செய்யப்பட்ட, தொம்பே பிரதேசத்தில் உள்ள காணியில் புதைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டுகள் உட்பட ஆயுத தொகையொன்றை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவற்துறையினர் மீட்டுள்ளனர். இந்த காணியில் உள்ள வீடு ஒன்றிற்கு பின்புறம் மிகவும் பாதுகாப்பான முறையில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு கிலோ எடை கொண்ட இரண்டு கிளைமோர் குண்டுகள், வெட்டு கத்திகள் இருந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இங்கு மீட்கப்பட்டு இரண்டு கைக்குண்கள் விடுதலைப்புலிகள் பயன்படுத்தும் கைக்குண்டுகள் எனவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காணியில் காவலாளியாக பணியாற்றிய இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த ஆயுதங்களை யார் அந்த காணியில் புதைத்தனர் என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. பியகம விலேஜ் விடுதி உரிமையாளரின் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் அண்மையிலேயே குறித்த காணியில் புதைக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி அதிகாலை தொம்பே பிரதேசத்தில் உள்ள தனது காணிக்கு சென்றிருந்த போது, பியகம விலேஜ் விடுதியின் உரிமையாளர், சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. எனினும் இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.


|    செய்தியை வாசித்தோர்: 9505

DMCA.com