விரிவான செய்திகள்

 

ரிசானா தூக்கிலிடப்படுவது இலங்கை அரசுக்கு முதலிலேயே தெரியும் !

10 January, 2013 by admin

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக்கை தாம் காப்பாற்ற இருப்பதாக கூறி இலங்கை அரசு நாடகம் ஆடியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. ரிசானாவுக்கு சவுதி அரேபியாவில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், ராஜதந்திர ரீதியில், தாம் அன் நாடோடு தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை பலசெய்திகளை வெளியிட்டது. இதுமட்டும் அன்றி, சவுதி அரேபியாவின் அமைச்சர் சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போதும் அவர் உறுதிமொழி வழங்கியதாக ரவூப் ஹக்கீம் கூறியிருந்தார். ஆனால் சவிதி அரேபியாவில் உள்ள கடுமையான சட்டங்களில் இருந்து எவரும் தப்பிக்கவே முடியாது என்பதனை இலங்கை அரசு ஏற்கனவே அறிந்திருக்கும். அமெரிக்கா பிரஜைகள் பலரை, மற்றும் பிரித்தானியப் பிரஜைகளைக் கூட இந் நாடு கடந்த காலங்களில் தூக்கில் இட்டுள்ளது என்பதனை எவரும் மறந்திருக்க முடியாது.

இப்படியான நிலையில், வெறும் அரசியல் லாபங்களுக்காகவும், முஸ்லீம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காவும், சாத்தியமே இல்லாத விடையத்தை அரசாங்கமும் மற்றும் ரவூப் ஹக்கீம் போன்ற அரசியல்வாதிகளும் இதுவரை காலமும் தெரிவித்து வந்துள்ளார்கள். சவுதி அரேபிய சட்டங்களுக்கு அமைவாக ஒரு வெளிநாட்டவரை தூக்கிலிடுவது என்றால், அது முறைப்படி அந் நாட்டு தூதரகத்துக்கு அறிவிக்கப்படவேண்டும் என்று சொல்கிறது. இதற்கு அமைவாக ரிசானாவை தூக்கிலிட முன்னர், அவர்கள் இது தொடர்பாக நிச்சயம் இலங்கை தூதரகத்துக்கு அறிவித்திருப்பார்கள். ஆனால் இதனை இலங்கை அரசாங்கம் அப்படியே மூடிமறைத்து விட்டது. குறுகிய நோக்கங்களுக்காக, ரிசானாவின் சாவின் மேல் விளையாடிய இலங்கை அரசையும், ரவூப் ஹக்கீம் போன்ற அரசியல்வாதிகளையும், பொதுமக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்.


|    செய்தியை வாசித்தோர்: 36069

DMCA.com