விரிவான செய்திகள்

 
Strict Standards: strftime(): It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected 'Europe/Berlin' for 'CET/1.0/no DST' instead in /homepages/31/d372634173/htdocs/phpnews/news.php on line 2534


3 பெண்கள் கொலை ! பாரிஸ் சம்பவம் !

d/m/y by admin



பாரிஸ் நகரின் மத்தியில் உள்ள பில்டிங் ஒன்றில், மூன்று பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விஷயம் (வியாழக்கிழமை) அதிகாலை தெரியவந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் digicode முறையில் செய்யப்பட்டிருந்த அந்த பில்டிங்கில், யாரோ மர்ம நபர்(கள்) இவர்களை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். இந்த கொலைகள் நடந்த விஷயம் வியாழக்கிழமை அதிகாலை தெரியவந்த நிலையில், காலை 9 மணிக்கே பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Manuel Valls சம்பவ இடத்திற்கு வந்தார். “இந்தப் பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு” என்றார். உள்துறை அமைச்சின் கீழேயே, காவல்துறை, மற்றும் பிரான்ஸின் உளவுத்துறைகள் உள்ளன.

பிரான்ஸ் ஜனாதிபதி François Hollande, காலையில் விமானப் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்றிருந்த வேளையில் இப் படுகொலைகள் பற்றி கேள்வியுற்று, “இந்த மூன்று பெண்களின் படுகொலைகள் மிகக் கொடூரமானவை. இந்தப் பெண்களிகளில் ஒருவரை நானும், இங்குள்ள பல அரசியல் பிரமுகர்களும் மிக நன்கு அறிவோம். அவர் எங்களை வந்து பலமுறை சந்தித்துள்ளார்” என்றார். இப்படி நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இருவர் இதுபற்றி கருத்து தெரிவிக்கும் அளவில், கொலை செய்யப்பட்ட பெண்கள் யார்? ஒரு போராளி அமைப்பைச் சேர்ந்தவர்கள். குர்திஸ் இன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள். கீழேயுள்ள போட்டோவில் உள்ளவர்கள்தான், கொல்லப்பட்ட பெண்கள். கொலைகாரர்கள் இவர்களை எப்படி வீழ்த்தினார்கள்… விபரமாக தருகிறோம்,

இந்தக் கொலைகள், குர்திஸ்தான் தகவல் மையத்தின் (centre d’information du Kurdistan) உள்ளே நடைபெற்றுள்ளன. 147 rue la Fayette என்ற முகவரியில் அமைந்துள்ள தகவல் மையம், பாரிஸில் ஜன நடமாட்டம் அதிகமான GARE DU NORD ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னால் உள்ள வீதியிலேயே அமைந்துள்ளது. குர்திஸ்தான் கலாச்சாரக் கல்லூரியை சேர்ந்த ஒருவர் அதிகாலை 2 மணிக்குத் தகவல் மையத்துக்கு சென்ற போதே, இவர்கள் மூவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு தகவல் கொடுத்திருக்கிறார். நிலத்தில் மூன்று துப்பாக்கி ரவைகளின் வெற்று ஷெல்கள் கிடந்துள்ளன. காலை சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த உள்துறை அமைச்சர், “குர்திஸ்தான் மக்களுக்கு நாம் எமது இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். பிரான்ஸ் அரசாங்கம் இந்தக் கொலையின் குற்றவாளிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்று உறுதியளிக்கின்றேன்” என்றும் கூறினார். இந்த கொலை சம்பவம் பற்றி அறிந்துகொண்டு அங்கு பெருந்திரளாக கூடியிருந்த குர்திஸ்தான் மக்கள், “துருக்கி அரசாங்கம்தான் கொலையாளிகளை அனுப்பியது” என்று குரல் எழுப்பினர்.

பெரும் அதிர்ச்சியுடனும் ஆத்திரத்துடனும் குழுமியிருந்த குர்திஸ் மக்களை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை திணற வேண்டியிருந்தது. “நாம் அனைவரும் PKK (குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி)” என்றும் “துருக்கி கொலையாளிகள்” என்றும் கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். கொல்லப்பட்ட மூன்று பெண்களில் 32 வயதான Fidan Dogan, கொலை நடந்த அந்தத் தகவல் மையத்தில் நிரந்தரமாக பணி புரிபவர். கொல்லப்பட்ட மற்றொரு பெண்ணான Sakine Cansiz, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி PKKவை உருவாக்கியவர்களில் ஒருவர். மூன்றாவது பெண் Leyla Soylemez, ஆயுதப் பயிற்சி பெற்ற இளம் போராளி. இந்த மூன்றாவது பெண், அநேகமாக மற்றைய பெண்களின் பாடிகார்டாக இருக்கலாம்.

PKK எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி, Abdullah Öcalan என்பவரால் 1978-ம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவாக்கப்பட்டது. பின்னர் 1981-ம் ஆண்டில், போராளி அமைப்பாக மாறி, துருக்கி அரசின்மீது கெரில்லா தாக்குதல்களை நடத்தினார்கள். இப்போது அங்காராவில் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிடைத்த தகவல்களின் அடிப்படையில், புதன்கிழமை மதியத்தின் பின்னர் இந்த மூன்று பெண்களும் அந்த தகவல் மையத்தில் தனியாகவே இருந்துள்ளனர். கொலை செய்ய வந்தவர்கள் அலுவலகத்துக்கு ஏதோ அலுவலாக வந்தவர்கள் என்று எண்ணியே இந்தப் பெண்கள் கதவை திறந்திருக்க வேண்டும். அந்த பில்டிங்கின் முதலாம் மாடியில் இருக்கும் இந்த அலுவலகத்தின் கதவுகள் எலக்ட்ரோனிக் இலக்கங்களால் (digicode) பாதுகாக்கப்பட்டுள்ளது. கீழேயிருந்து அழைப்பு மணியை அழுத்தி, மைக்கில் தாம் யார் என்று தகவல் தெரிவித்து, அதன்பின் அலுவலகத்தில் உள்ளவர்கள் அங்கிருந்தே கதவை திறந்து விட்டால்தான், மேலே செல்ல முடியும்.

புதன்கிழமை மாலை 3 மணியளவில், கட்சியின் சாதாரண உறுப்பினர் ஒருவர் பலமுறை மணி அழுத்தித் தொடர்பு கொண்டும், அவரது அடையாளம் தெரியாத காரணத்தால், உள்ளிருந்து கதவு திறந்து விடப்படவில்லை. கட்சி பிரமுகர்கள் யாரையாவது அழைத்து வாருங்கள் என உள்ளேயிருந்து பதில் கூறியிருந்தார்கள் இந்த பெண்கள். அதாவது, அவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன்தான் உள்ளே இருந்திருக்கிறார்கள். தமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதை அறிந்திருக்கிறார்கள். இது மாலை 3 மணிக்கு நடைபெற்றது. அதன்பின், கொலையாளிகளுக்காக மேலேயிருந்து கதவு திறந்து விடப்பட்டுள்ளது என்பதால், கொலையாளி, அல்லது கொலையாளிகளில் ஒருவர், இவர்களுக்கு நன்கு பரிச்சயமான நபராக இருந்திருக்க வேண்டும். (அல்லது, கொலையாளியிடம், கதவை திறப்பதற்கான சாவி இருந்திருக்க வேண்டும்).

கொல்லப்பட்ட இரு பெண்கள் கழுத்தில் சுடப்பட்டுள்ளனர். மூன்றாவது பெண்ணிற்கு வயிற்றிலும் நெற்றியிலும் சூட்டுக் காயங்கள் உள்ளன. அதாவது, குளோஸ் ரேஞ்சில் சுடப்பட்டுள்ளனர். அதன்பின் மாலை சுமார் 4 மணியளவில், கட்சிப் பிரமுகர் ஒருவர் வந்திருக்கிறார். அவர் பலமுறை அழைப்பு மணியை அழுத்தியும், உள்ளேயிருந்து பதில் ஏதும் வரவில்லை. அலுவலகத்தில் யாரும் இல்லை என்ற நினைப்பில் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அலுவலகத்தில் யாரும் இல்லை என்று அவர் திரும்பிச் சென்ற நேரத்தில், இந்த மூன்று பெண்களும் அலுவலகத்தில்தான் இருந்திருக்கிறார்கள், ஆனால் உயிருடன் அல்ல!

புதன்கிழமை மாலை 3 மணிக்கும், 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், இந்த கொலைகள் நடந்திருக்க வேண்டும். அந்த பில்டிங்கில் அப்போது வேறு பலரும் இருந்தார்கள். வேறு அலுவலகங்களும் இயங்கின. இதனால், கொலையாளிகள் சைலென்ஸர் பொருத்தப்பட்ட துப்பாக்கிகளால் சுட்டிருக்க வேண்டும். ஜனாதிபதியும், உள்துறை அமைச்சரும் இந்த கொலைகள் பற்றி கவனம் எடுத்திருப்பதால், உடனடியாகவே விசாரணைகள் தொடங்கிவிட்டன. பிரான்ஸ் நீதித்துறை இவ்வழக்கை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் கையளித்துள்ளது. விசாரணைகளை பிரான்ஸ் பயங்கரவாதத் தடுப்புத் துணை செயலகம் (SDAT – La Sous direction anti-terroriste) ஆரம்பித்து விட்டனர். குர்திஸ் இன மக்கள் உலகின் வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். உதாரணமாக தமிழர்களில், இந்திய தமிழர்கள், மலேசிய தமிழர்கள், இலங்கை தமிழர்கள் என்று வெவ்வேறு நாடுகளில் உள்ளதுபோல.

பிரான்சின் அனைத்துப் பகுதிகளிலுமாக சேர்த்து, கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் குர்திஸ் இன மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், சுமார் 90 சதவீதமானவர்கள், துருக்கியை சேர்ந்தவர்கள். மீதி குறைந்த அளவில் ஈரானிய குர்திஸ் மக்கள், ஈராக்கிய குர்திஸ் மக்களும் உள்ளனர். மிகமிக சொற்ப அளவில், சிரியா, லெபனான் மற்றும் முன்னாள் கோகசஸ் ரஷ்யக் குடியரசின் குர்திஸ் மக்களும் உள்ளனர். இந்தக் கொலை முற்றிலும், துருக்கி குர்திஸ் இன மக்களுடன் தொடர்புடையது. துருக்கி அரசு உளவுத்துறை, அல்லது அவர்களின் ஆட்கள் இந்தக் கொலைகளை செய்திருக்கலாம் என்பதே PKK கட்சியின் நிலைப்பாடு. அதேநேரத்தில், இது உள்வீட்டு விவகாரமாக இருக்கலாம் என்ற பேச்சுக்களும் எழாமல் இல்லை.

இந்த மூன்று பெண்களும் சுட்டுக் கொல்லப்பட்ட பாரீஸ் GARE DU NORD பகுதிக்கு அருகேதான் கடந்த நவம்பர் 8-ம் தேதி, விடுதலைப்புலிகள் நெடியவன் அணி தளபதி பரிதி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்போது சுட்டுக் கொல்லப்பட்டவர்களும் விடுதலை இயக்கம்; அவரும் விடுதலை இயக்கத்தின் ஒரு பிரிவு. ஆனால், பரிதி சுட்டுக் கொல்லப்பட்டபோது, பிரான்ஸ் உள்துறை அமைச்சரும் ஸ்பாட்டுக்கு வரவில்லை, ஜனாதிபதியும் கருத்து தெரிவிக்கவில்லை… We wonder why.


|    செய்தியை வாசித்தோர்: 7787

DMCA.com