விரிவான செய்திகள்

 

குண்டர் படைய ஏவிய இலங்கை அரசு: அபூர்வமான புகைப்படங்கள் !

13 January, 2013 by admin

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அமைய,செயற்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதிலும் இருந்து வந்த சட்டத்தரணிகள் கலந்து கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று முற்பகல் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இருந்து சட்டத்தரணிகள் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்கள் செல்லும் வழிகளில் காவற்துறையினர் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் பேரணி ஹில்டன் விடுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டது.

ஆனால் இவ்விடத்தில் ஏற்கனவே தயாரா நின்ற குண்டர் படையினர், சட்டத்தரணிகள் மீதும் விரிவுரையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். தாக்குதல் நடத்தினார்கள் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தாலும், இது குறித்த புகைப்படங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதிர்வின் வாசகர்களுக்காக இப் புகைப்படங்களை நாம் இங்கு பிரசுரிக்கிறோம்.
|    செய்தியை வாசித்தோர்: 57237

DMCA.com