விரிவான செய்திகள்

 

நாஞ்சிலுக்கு இன்னோவா கார், எனக்கு வெறும் அம்பேத் கார் !

13 January, 2013 by adminதா. பாண்டியனுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தா. பாண்டியன் தற்போது அ.தி.மு.க. மாநில செயலாளர் என்ற பதவியில்… SORRY,SORRY…. SLIP OF TONGUE, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக உள்ளார்.

தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, பெரியார் விருது, அம்பேத்கர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களின் பெயர்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திருவள்ளுவர் விருது – கலைமாமணி டாக்டர் ந.முருகன் (சேயோன்), தந்தை பெரியார் விருது – டாக்டர் கோ.சமரசம், அண்ணல் அம்பேத்கர் விருது – தா.பாண்டியன், பேரறிஞர் அண்ணா விருது – கே.ஆர்.பி.மணிமொழியன், பெருந்தலைவர் காமராசர் விருது – சிங்காரவடிவேல், மகாகவி பாரதியார் விருது- பாரதிக் காவலர் கு.ராமமூர்த்தி, பாவேந்தர் பாரதிதாசன் விருது – பேராசிரியர் முனைவர் சோ.ந.கந்தசாமி, தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது – முனைவர் திருமதி பிரேமா நந்தகுமார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – முனைவர் நா.இராசகோபாலன் (மலையமான்) ஆகியோருக்கு வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தோழர் தா.பாண்டியனுக்கு விரக்தி கலந்த சிரிப்பையே ஏற்படுத்தியிருக்கும் என்பது எமது ஊகம். ம.தி.மு.க.வில் இருந்து மிகச் சமீபத்தில் வந்த நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா கார், எனக்கு வெறும் அம்பேத் கார் என்று தோழர் விரக்தியடையக் கூடும். ஆனால் தோழரே, பொங்கலுக்கு பொதுமக்களுக்கே வேஷ்டி-சேலை கொடுக்கும் புரட்சித்தலைவி, பொறுமையாக காத்திருக்கும் உங்களை கவனிக்காமல் விட்டுவிடுவாரா? நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரட்டும், அம்மா அப்போது கிள்ளித் தரமாட்டார், அள்ளித் தருவார்… தொகுதிகளை அல்ல, தொகையை !


|    செய்தியை வாசித்தோர்: 14515

DMCA.com