விரிவான செய்திகள்

 

12 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பலாத்காரம் !

14 January, 2013 by admin

ஐதராபாத்: ஆந்திராவில் 12 வயது சிறுமியை மிரட்டி நான்கு மாதகாலமாக பாலியல் பலாத்காரம் செய்த சமையல்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான சமையல்காரரின் பெயர் சீதாராம் வயது 58. சென்னையை சேர்ந்த இவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத் சென்ற அவர் வாராசி கூடா என்ற இடத்தில் வாடகைக்கு அறை எடுத்து தனியாக வசித்து வருகிறார். இவர் பல இடங்களுக்கு சென்று சமையல் வேலை செய்து வருகிறார்.

இவரிடம் சீதாவல்மண்டி பகுதியைச் சேர்ந்த ஏழை குடும்பத்தினர் சமையல் பணி உதவியாளராக இருந்தனர். சீதாராம் சமையல் பணிக்கு செல்லும்போது இந்த குடும்பத்தினரை அழைத்து செல்வார். அப்போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் செலவுக்கு பணம் கொடுத்து இதனை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டினார். இப்படி 4 மாதமாக சீதாராம் அந்த மைனர் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் மைனர் பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. நீண்ட நாட்களாகியும் குண மாகாததால் அவளை ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்தேகம் அடைந்து அவளிடம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சீதாராம் மிரட்டி கற்பழித்து வந்ததை சிறுமி கூறினாள். இதையடுத்து தலைமறைவான சீதாராமை சில்ககுடா போலீசார் கைது செய்தனர்.


|    செய்தியை வாசித்தோர்: 24213

DMCA.com