விரிவான செய்திகள்

 

அவுஸ்திரேலியாவில் கோட்டபாயவின் ஆட்கள் அட்டகாசம்: உள்ளூர் ஊடகம் தகவல் !

14 January, 2013 by admin

அவுஸ்ரேலியாவில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை புறக்கணிக்கக் கோரி போராட்டம் நடத்தியவர்களை புலனாய்வு முகவர்கள் பின்தொடர்ந்து ஒளிப்படங்களை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்கள் சிறிலங்கா அரசுக்காக தகவல்களை திரட்டியுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது என. சிட்னியிலும், மெல்பேர்னிலும் துடுப்பாட்ட மைதானங்களுக்கு வெளியே, சிறிலங்கா அணியை புறக்கணிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றனர். இவர்களை பிந்தொடர்ந்த இலங்கப் புலனாய்வாளர்கள் புகைப்படங்களை எடுத்ததாகவும் அதிர்வு இணையம் அறிகிறது.

மேலும் இவர்களை அச்சுறுத்தும் விதத்தில், அவுஸ்ரேலியாவில் உள்ள சிறிலங்கா அதிகாரிகளுடன் தொடர்புடைய புலனாய்வாளர்கள் படம்பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவுஸ்ரேலிய சமூகத்தின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் தம்மை மூன்று பேர் படமெடுத்ததாக மெல்பேர்ன் போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவர் ஒருவர், தற்போது தெரிவித்துள்ளார். ஒளிப்படங்களில் உள்ளவர்களின் தனிப்பட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் சிறிலங்கா திரும்பும் போதா, அல்லது சிறிலங்காவில் உள்ள அவர்களின் உறவினர்களோ துன்புறுத்தல்களை எதிர்கொள்ளலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சிறிலங்கா துடுப்பாட்ட அணியை புறக்கணிக்கும் போராட்டத்தின் அமைப்பாளர் ட்ரேவர் கிரான்ட், அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் காருக்கு, எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். எனினும், இது குறித்து காவல்துறையிடமே முறைப்பாடு செய்ய வேண்டும் என்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.


|    செய்தியை வாசித்தோர்: 24756

DMCA.com