விரிவான செய்திகள்

 

அதிர்ச்சித் தகவல்: இலங்கை இராணுவம் அரைவாசிபலத்தை இழந்துள்ளது ?

14 January, 2013 by admin

விடுதலைப் புலிகளோடு முதல் கட்ட போர் ஆரம்பித்தவேளை, இலங்கை இராணுவத்தில் சுமார் 1லட்சத்தி 90,000 ஆயிரம் பேர் இருந்தார்கள். இருப்பினும் பின்னர் கோட்டபாயவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மேலும் 1 லட்சம் இளைஞர்களை இலங்கை அரசு தமது படையின் இணைத்தது. மேலும் 10,000 பேரை கடற்படையிலும் வான் படையிலும் இணைத்தது இலங்கை அரசு. ஒரு காலகட்டத்தில் முப்படைகளையும் சேர்த்து சுமார் 3 லட்சம் படையினர் இலங்கையில் இருந்தார்கள். 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தபின்னர், இராணுவத்தில் இருந்து பல இளைஞர்கள் வெளியேறி இத்தாலி, அவுஸ்திரேலியா, மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்பை தேடிச் சென்றுவிட்டனர். 2010ம் ஆண்டில் சுமார் 20,000 ஆயிரம் பேர் இராணுவத்தை விட்டு விலகியதாகச் சொல்லப்பட்டது. பின்னர் 2011ல் 27,000 பேர் விலகியுள்ளார்கள்.

இது இவ்வாறு இருக்கையில், போன வருடம் மாத்திரம் சுமார் 71,000 இளைஞர்கள் படையில் இருந்து விலகியுள்ளார்கள். இதில் 30,000 பேர், முறையாக விலகியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேபோல 2010 மற்றும் 2011ல் சொல்லாமல் ஓடித் தப்பிய இராணுவம் எவ்வளவு என்ற விடையம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. கடந்த மூன்று வருடங்களையும் கூட்டிப் பார்த்தால், ஆக மொத்தத்தில், ஒரு லட்சத்தி 18,000 ஆயிரம் பேர் இதுவரை விலகியுள்ளார்கள் என்பது உத்தியோகபூர்வ அறிக்கையாகும். அப்படி என்றால் இராணுவத்தில் இருந்து சொல்லாமல் ஓடித் தப்பியவர்களையும் சேர்த்து கூட்டினால், இலங்கை இராணுவத்தின் பலம் சரியாக அரைவாசி குறைந்துள்ளது.

தமிழ் இளைஞர்களுக்கு உள்ளே இருந்த போராட்ட உணர்வை இராணுவத்தினர் திட்டமிட்டே மழுங்கடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் கொல்லைப் புறத்தில் என்ன நடக்கிறது என்பதனை அவர்கள் அவதானிக்க தவறிவிட்டனர். அதேபோல சிங்கள இளைஞர்களும் தமது வாழ்வாதாரத்தை முன்னேற்றவே கூடிய கவனத்தை செலவழித்து வருகின்றார்கள் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. தற்போது அணைந்து கிடக்கும் தமிழர் போராட்டம் என் நேரமானாலும் வெடிக்கலாம். மீண்டும் பழைய நிலை உருவாகும் காலமும் நெருங்கலாம். வடக்கு மற்றும் கிழக்கை பாதுகாக்க, தற்போது இலங்கை அரசிடம் உள்ள படைகள் போதுமா என்ற , காலம் விரைவில் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


|    செய்தியை வாசித்தோர்: 47920

DMCA.com