விரிவான செய்திகள்

 

சுடுவதற்கு சில செக்கன்கள் முன்னர் !

15 January, 2013 by admin

நியூயோர்க் நகரத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நியூயோர்க் நகரில் சாலையில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்த டாக்சி ஒன்றினுள் திடீரென ஏறிய, ஆபிரிக்க இனத்தவர் ஒருவர் தன் கையில் உள்ள துப்பாக்கியைக் காட்டி ஓட்டுணரை மிரட்டியுள்ளார். எங்கே செல்லவேண்டும் என்று டாக்ஸி ஓட்டுனர் கேட்டவேளை, எதுவும் பேசாது கைத்துப்பாக்கிடால் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதனையடுத்து 3 துப்பாக்கிச் சன்னங்கள் ஓட்டுணர் உடலைத் துளைத்துள்ளது. டாக்ஸிசில் இருந்து குதித்து தன் உயிரைக் காப்பாற்றவேண்டிய சூழ் நிலை ஓட்டுணருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த ஆபிரிக்கர், தன் டாக்ஸியில் ஏன் ஏறினார், எதற்காச் சுட்டார் என்று எனக்குத் தெரியவில்லை என்று டாக்ஸி ஓட்டுணர் தெரிவித்துள்ளார். 3 ரவைகள் அவர் உடலை பதம்பார்த்தாலும், அவர் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். துப்பாக்கியால் சுட்ட ஆபிரிக்க நாட்டவரை, டாக்ஸியில் உள்ள பாதுகாப்பு கமரா துல்லியமாக படம் எடுத்துள்ளது. இதனை வைத்தே பொலிசார் குறிப்பிட்ட ஆபிரிக்க நாட்டவரை அடையாளம் கண்டுபிடித்துள்ளார்கள். அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் முன்னெப்போழுதும் இல்லாதவாறு, தலைதூக்கியுள்ளது என பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

அயல் வீட்டாரோடு பிரச்சனை என்றால் கூட துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் கலாச்சாரன் அமெரிக்காவில் வளர்ந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும் !


|    செய்தியை வாசித்தோர்: 25903

DMCA.com