விரிவான செய்திகள்

 

பாலச்சந்திரன் உடலின் பின் பகுதி ! கழுத்தில் காணப்படுவது என்ன ?

16 January, 2013 by adminதேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் கடைசி மகன் பலச்சந்திரன், இலங்கை இராணூவத்திடம் சரணடைந்த நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தியை புகைப்பட ஆதாரங்களோடு நிரூபித்தது சனல் 4 தொலைக்காட்ச்சி. பாலச்சந்திரன் உடல் நிலத்தில் கிடப்பதும், அவருடன் சென்ற அவரது மெய்ப்பாதுகாப்பாளர்கள் ஐவர் உடல்களும் நிலத்தில் இருப்பது போன்ற படம் வெளியாகி இருந்தது. இருப்பினும் இறந்த பாலச்சந்திரன் உடலை பிரட்டிப் போட்டு, இராணுவத்தினர் எதனையோ செய்ய முற்படும் வேளையில் எடுக்கப்பட்ட படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இப் படத்தில் பாலச்சந்திரன் முதுகில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஏற்கனவே சனல் 4 தொலைக்காட்சியானது சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதாவது சனல் 4 தொலைக்காட்சியின் புகைப்பட நிபுணர் ஒருவர், இவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டிருக்கலாம் என்பதனை விளக்கியுள்ளார். இலங்கை இராணுவமானது பாலச்சந்திரனுடன் சென்ற 5 மெய்ப்பாதுகாப்பாளர்களையும், பாலச்சந்திரன் கண் எதிரே சுட்டுக் கொன்று, ஒரு மரண பயத்தை முதலில் உருவாக்கி, பின்னர் பாலச்சந்திரனின் மார்பிலும் முதுகிலும் சுட்டுள்ளார்கள். சுடப்பட்டு வீழ்ந்த பாலச்சந்திரன் உடல் மீது மீண்டும் முதுகில் சுட்டுள்ளனர் இலங்கை இராணுவத்தினர். அதாவது அவர்கள் பாலச்சந்திரன் நூறு வீதம் இறக்கவேண்டும் தச்சுத்தவறியாவது பிழைத்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்கள்.

இந் நிலையில், பாலச்சந்திரனுடன் சென்ற 5 மெய்ப்பாதுகாப்பாளர்களது, உடல்கள் நிலத்தில் கிடக்கும் காட்சியை மிகவும் அருகில் சென்று இராணுவத்தினர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இப் புகைப்படங்களையே நீங்கள் இங்கே காண்கிறீர்கள். இதில் பாலச்சந்திரன் எனச் சந்தேகிக்கப்படும் உடலில் உள்ள கழுத்தில், நீளமான கறுப்பு நிறக் கயிறு ஒன்றும் உள்ளதை அவதானிக்க முடிகிறது. இதன் பிரகாரம், இலங்கை இரானூவமானது, முதலில் பாலச்சந்திரனை சித்திரவதைக்கு உள்ளாக்கி பின்னர் சுட்டுக்கொன்றிருக்கலாம் என நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.


|    செய்தியை வாசித்தோர்: 98029

DMCA.com