விரிவான செய்திகள்

 

திடுக்கிடும் செய்தி: எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி !

16 January, 2013 by adminநாடுகடந்த அரசின் பிரதமர் திரு.ருத்திரகுமாரனின் நண்பராக இருந்தவரும், மற்றும் உலகத் தமிழர் பேரவையின்(GTF) முன் நாள் தலைவராக இருந்தவருமான நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்த பதவிகொடுத்துள்ளார். நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் நீண்ட நாட்களாக பல புலம்பெயர் அமைப்புகளில் ஊடுருவி செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். அதுமட்டுமல்லாது இவரது மகன் அருச்சுனா எதிர்வீரசிங்கமும், லண்டனில் இருந்து பல தமிழ் அமைப்புகளில் செய்ல்பட்டு வந்தவர். இவர் லண்டனில் இயங்கிவந்த ரி.ஆர்.ஓ அமைப்பின் பொறுப்பாளர், ரெஜி அவர்களின் நெருங்கிய நண்பர் என்பதும், வணங்கா மண் கப்பல், இலங்கைக்கு அனுப்பப்படும் பொழுதில், இவர் அதற்காக வேலை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையங்கள் ஆகும்.

யார் இந்த எதிர்வீரசிங்கம் ?

1952ஆம், 1956ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் 1959ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இலங்கை அணியின் தடகள வீரராகக் கலந்து கொண்ட எதிர்வீரசிங்கம் பின்னர் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக தமிழ் மக்களிடையே வெளிப்பாட்டார். கே.பியின் தலைமையில் அனைத்துலக செயலகம் இயங்கிய 1990களில் இவரையும், உருத்திரகுமாரனையும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பின்கதவுத் தொடர்பாளர்களாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு பயன்படுத்தி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் தனது புதல்வர் அர்ஜுனுடன் வன்னிக்கு சென்ற இவர், தமிழீழ அரசியல்துறையுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டதோடு, தனது மகனை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.சிங்களப் பெண் ஒருவரை மணம்முடித்த இவரது மகன் அர்ஜுன் ஓரிரு மாதங்களில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கிய பிரமுகராக உயர்ந்ததோடு, கொழும்பில் இயங்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திட்ட இணைப்பாளராகவும், முகாமையாளராகவும் பதவி வகித்தார். சந்திரிகா குமாரதுங்கவின் ஆலோசகர் ஹரீம் பீரிசுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த இவர், 2005ஆம் ஆண்டு (சுணாமிக்கு பின்னர்) முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ரன் கொழும்பு சென்ற பொழுது அவரை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக (அப்போது) விளங்கிய, ரெஜி சந்தித்து, நிகழ்வில் கலந்து கொண்டார். ரெஜியுடன் அருச்சுணா எதிர்வீரசிங்கமும் பில் கிளிங்டனைச் சந்தித்துள்ளார்கள்.

நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் போன்று காண்பித்து வன்னியில் உயர்மட்டத் தொடர்புகளைப் பேணிய நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் மற்றும் இவரது மகன் அருச்சுணா எதிர்வீரசிங்கம், நீண்ட காலமாக சிங்கள அரசின் கைக்கூலியாக இயங்கியதையே இவரது செய்கை உணர்த்தி நிற்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இத்தனை உளவாளிகளை வைத்துக்கொண்டா நாம் தமிழீழ போராட்டத்தை நடத்தியிருக்கிறோம் ?

இது குறித்து வெள்ளையானை ஊடகத்தில் வந்த கருத்துக்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது:

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் மகிந்தாவுடன் இனைந்தார் !!!!(ஆதாரம் இணைப்பு )

உலகத் தமிழர் பேரவையின் முதலாவது தலைவர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் மகிந்தா அரசுடன் இணைந்தார். வடமாகாணத்தை அக்கிரமித்துள்ள இராணுவத் தளபதி சந்திர சிறியின் ஆலோசகராக இவர் பதவி எற்றுளதாக வடமாகாண சபை இணைய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விரைவில் ஜெர்மனியில் பெர்கொவ் பவுன்டேசன் அனுசரணையுடன் கைச்சாத்திட சுரேன் சுரேந்திரன் ஒற்றைக் காலில் நிற்பதாகவும் . நாடுகடந்த
அரசை தமிழீழக் கோசத்தை கைவிடுமாறு சுரேன் நெருக்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பின்னணியில் , எதிர்வீரசிங்கத்தின் போக்குடைய சிலர் உலகத் தமிழர் பேரவைக்குள் இன்னும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கலாம். எல்லா அமைப்புகளுக்குள்ளும் ஊடுருவல் அல்லது பலவீனமானவர்கள் இருக்கலாம் என்பதை
இது தெளிவாக மீண்டும் உறுதிப்படுத்துகின்றது . எனவே தனி ஒருவரின் கையில் முடிவுகளை விடாது அமைப்புக்கள் பார்த்துக் கொள்வது நல்லது . தீர்மானங்களை விவாதித்து முடிவு எடுப்பதன் அவசியதை இச் சம்பவம் வலியுறுத்தி நிற்கின்றது . இது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பொருத்தமானதாகும்.

இவரை உட்கொணர்ந்தவர்கள் , இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், இவர் தொடர்பான உலகத் தமிழர் பேரவைக்குள் சர்ச்சை கிளம்பிய பொழுது இவருக்காக வாதாடியவர்கள் தொடர்பாகவும் ஏனையவர்கள் தொடர்பாகவும் உலகத் தமிழர் பேரவை பூர்வாங்க விசாரணை நடதாமல் முக்கியமான நகர்வுகளை மேற்கொள்வது மிகவும் அபாயகரமானது . மே 2009 இற்கு பின் உருவான பல அமைப்புக்களின் உள்ளர்ந்த நோக்கம்
தொடர்பான மிக முக்கியமான கேள்விகளை இந்த வெட்கக் கேடான சம்பவம் எழுப்பி நிற்கின்றது . வீரியத்துடன் செயல்பட்டு வரும் அமைப்புக்களை புதிய அமைப்பு ஒன்றினுள் சங்கமமாக்கி இல்லாமல் செய்தல் , புதிய அமைப்பை உருவாக்கி மக்களிடையே பிரிவினையை எற்படுத்தும் நோக்கத்துடன் இவை உருவாக்கப்பட்டனவா ?

இது ஊடுருவலாளர்களின் வேலையா ? இந்த ஊடுருவல் எவ்வளவு காலமாக உள்ளது போன்ற கேள்விகள் இந்த சம்பவத்தால் எழுந்து நிற்கின்றன .நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் மீது பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்த
குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் பதவி விலகினார். சுகந்த குமார் பிரித்தானிய தமிழர் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார் . சென் கந்தையாவும் , சுரென் சுரேந்திரனும் ,பிரித்தானிய தமிழர்
பேரவைனடவடிக்கைகளில் பங்கு கொள்ளாது தாமாக விலகிக் கொண்டனர் என அறியப்படுகின்றது. பின்னர் இவர்கள் நாடுகடந்த அரசு மேடைகளில் சுறுசுறுப்பாக ஓடி திரிந்ததை மக்கள் அவதானித்து இருந்தனர் . அங்கு
இவர்களுக்கு கதிரை கிடைக்காததால் . பி.ரி.எவ் ஐ கைப்பற்ற முயற்சித்து முடியாத நிலையில் இருக்கின்றனர் .

இருப்பினும் உலகத் தமிழர் பேரவையில் அங்கம் வகிப்பதாக கூறிக்கொள்ளும் சுரேன் சுரேந்திரன், சென் கந்தையா , சுகந்த குமார் , ஆகியோர் என்ன அடிப்படையில் எந்த அமைப்பின் பிரதினிதிகளாக உலகத் தமிழர் பெரவையில்
உறுப்புரிமை பெறுகின்றனர் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. இவர்கல் பிரிதானிய தமிழர் பேரவை மீது கடுப்பாகவே உள்ளனர் . அணமையில் பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்த உலகத் தமிழர் மகானாட்டை
பலவீனமடைய செய்யும் வகையில் இஷ்கைப் உரையாடல் ஒன்றை சென் கந்தாயா செய்ததாக தெரிய வருகின்றது. அவர் தன்னுடன் தொடர்புடைய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை மாகானாட்டுக்கு எற்பாடு செய்ய மறுத்தார் என தெரிய வருகின்றதை இது ஒருபுறம் இருக்க இவர்கள் அணமையில் மகிந்தவின் நெருங்கிய நணபனான ,மங்களசமரவீராவை இரகசியமாக சந்திததமை தெரிய வந்த பொழுது அது தனிப்பட்ட சந்திப்பு என மூடி மறைத்து விட்டனர் .


|    செய்தியை வாசித்தோர்: 68167

DMCA.com