விரிவான செய்திகள்

 

கோட்டபாயவோடு சேர்ந்து இயங்கும் தமிழர் யார் அதிரடியாக வெளிவந்த தகவல் !

16 January, 2013 by admin

இலங்கை அரசின் தேசிய பாதுகாப்பு இணையம் சற்று நேரத்துக்கு முன்னர் ஹக் (ஊடறுக்கப்பட்டுள்ளது). நஷனல் செக்கியூரட்டி.எல்கே (http://www.nationalsecurity.lk) என்று அழைக்கப்படும் இந்த இணையத்தை ஊடறுத்த சிலர், அதில் உள்ள அட்மின் தகவல்களை வெளியிட்டுள்ளார்கள். சில மணி நேரம் தடைப்பட்டிருந்த பாதுகாப்பு இணையம் மீண்டும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இருப்பினும் அது இயங்காத நிலை காணப்படுகிறது. இலங்கையின் தேசிய பாதுகாப்பு இணையத்தை ஊடறுத்து (தாக்கியவர்கள்), சேவரில் உள்ள அட்மின் மற்றும் மின்னஞ்சல் பரிவர்த்தனை தொடர்பாக, பல விடையங்களையும், நூற்றுக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகளையும் வெளியிட்டுள்ளார்கள். இதில் பல தமிழர்களுடையது என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் வீரகேசரி பத்திரிகையின், மின்னஞ்சலும் அடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இலங்கை அரசின் பாதுகாப்பு இணையத்தளமானது, தாம் அப் டேட் செய்வதாகவும் அதனால் தான் தமது இணையம் தடைப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இலங்கையின் தேசிய பாதுகாப்பு மையத்தோடு யார் யார் மின்னஞ்சல் தொடர்பில் இருந்தார் என்பது தொடர்பான முழு, தரவுகளும் புலம்பெயர் தமிழ் புத்தி ஜீவிகளால் சேமிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பலரது தகவல்கள் விரைவில் வெளியாகியுள்ளது.

இங்கே அழுத்திப் பார்க்கலாம்
|    செய்தியை வாசித்தோர்: 95944

DMCA.com