விரிவான செய்திகள்

 

புலிகளுடனான யுத்தத்தில் பாவிக்கப்பட்ட அதி நவீன பொருட்கள் !

21 January, 2013 by adminபார்ப்பதற்கு அப்படியே கொசு போலவே தெரிகிறதா ? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும். 2009ம் ஆண்டில் விடுதலைப் புலிகளோடு இலங்கை அரசானது உச்சக்கட்ட போரில் ஈடுபட்டவேளை, அப்போது போரில் பின்னடைவுகளைச் சந்தித்த புலிகள் முள்ளிவாய்க்கால் பக்கமாகவே நகர்வார்கள் என்பது இலங்கை அரசுக்கு தெரிந்திருந்தது. புலிகள் அப்பகுதிக்குச் செல்ல முன்னரே, அவ்விடத்தில் உள்ள சில மரங்களில் இலங்கை வாண்படையின் உலங்குவானூர்திகள் சில ரிரான்ஸ் மீட்டர்களை விதைத்தது. வானத்தில் இருந்து தூவக்கூடிய இவ்வகையான ரிரான்ஸ் மீட்டர்கள், ஒலியையும் சில மின்காந்த அலைகளையும் அப்படியே, கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அனுப்பவல்லது. இவ்வகையான நானோ தொழில் நுற்ப்பத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் ஏற்கனவே தயாரித்து வருகின்றனர் என்ற செய்தி அரசல் புரசலாக வெளிவந்திருந்தது. ஆனால் அதனைப் பயன்படுத்த நல்ல தருணத்தை இன் நாடுகள் எதிர்பார்த்து காத்திருந்தது.

இந்தவேளை பாரிய பின்னடைவில் விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்தது. அவர்கள் யுதத்தில் தோல்வியைத் தழுவிக்கொள்வார்கள் என்று பல மாதங்களுக்கு முன்னரே மட்டுக்கட்டிய சில நாடுகள், தாம் தயாரித்த சில அதி நவீன ஒட்டுக் கேட்க்கும் கருவிகளையும், நானோ தொழில் நுட்ப்ப கருவிகளையும் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதனை முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு பயன்படுத்தியும் உள்ளது. புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு வரலாறு. எனவே பிற்காலங்களில், புலிகள் தோற்றது தாம் இவ்வாறு வழங்கிய கருவிகளால் தான் என்று இந் நாடுகள் தமது பொருட்களை சந்தைப்படுத்தும். உலகிலேயே பலம் வாய்ந்த விடுதலை அமைப்பு தோற்றுப்போனதே, இக் கருவிகளால் தான் என்று அன் நாடுகள் இரகசியமாக மார்தட்டும்.

இச் செய்திகளை நாம் கடந்தவருடம் வெளியிட்ட வேளை அதற்கான ஆதாரங்கள் இருக்கவில்லை. ஆனால் தற்போது அமெரிக்காவின் பென்ரகன் நானோ தொழில் நுட்ப்ப வலயத்தில் இருந்து சில புகைப்படங்கள் கசிந்துள்ளது. இவை அமெரிக்கா இரகசியமாகத் தயாரிக்கும் ரோபோ நுளம்பு பற்றி மிகவும் துல்லியமான தகவல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. பலவகையான ஒட்டுக்கேட்க்கும் மற்றும் நோட்டமிடும் கருவிகளை அமெரிக்க இதுவரை தயாரித்து வைத்துள்ளது. ஆனால் அதனைவிட மேலும் அதி உயர் தொழில் நுட்ப்ப முறையில் இந்த ரோபோ நுளம்பை அமெரிக்கா தயாரித்துள்ளது. இதுபோல பல்வேறு வகையான நானோ நுண்ணியல் பொருட்களை அமெரிக்கா தயாரித்து வருகிறது. இனி இந்தக் கருவி குறித்து நோக்கலாமா ?

FULL STORY ABOUT THISபார்ப்பதற்கு அப்படியே கொசு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும். இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து ரிமோட் மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய கமராவையும் மைக்குரோபோனையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த கொசு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட் மூலமாக மனிதர்கள் மீது கொசுவைப் போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்கியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம். முக்கியமாக குறிப்பிட்ட ஒரு நபரை பின்தொடர்ந்து செல்ல (Tracking) உதவிவருகின்ற RFID Nanotechnology இனை தோலின் மீது விட்டுச்செல்லவும் இந்த ரோபோவினால் முடியும்.

சாதாரணமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஜன்னலின் ஊடாகவே ஒருவரின் வீட்டிற்குள் பறந்து சென்று நுழையக்கூடிய ஆற்றல் இதற்குள்ளது. அத்துடன் இது பறந்து சென்று குறிப்பிட்ட மனிதரின் ஆடையில் ஒட்டிக்கொள்வதன் மூலம் இரகசியமாக அவருடன் சேர்ந்து அவரது வீட்டிற்கே சென்று துப்பறியக்கூடிய திறமையுடையது. மேலும் அதிதிறமை வாய்ந்த இவ்வகை ரோபோக்கள் இராணுவத் துறையிலும், உளவுத் துறையிலும்தான் பெரிதும் பயன்படுகின்றன.
|    செய்தியை வாசித்தோர்: 79807

DMCA.com