விரிவான செய்திகள்

 

பரிதியின் கொலையில் திருப்பம் உண்டா ?

06 February, 2013 by admin

கடந்தவருடம் நவம்பர் மாதம், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கேணல் பரிதி அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். முதலில் படுவேகமாக விசாரணைகளை நடத்தி வந்த பிரெஞ்சுப் பொலிசார் பின்னர் அதில் அதிகளவு அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. இதுவரை முறையான விசாரணை எதனையும் நடத்தவில்லை என்று, கூறப்பட்டு வருகிறது. இதேவேளை பாரிசில் கேணல் பரிதி அவர்களைச் சுடச் செல்லி, இலங்கை அரசால் ஏவப்பட்டவர் ஒரு தமிழ் கனேடியர் என்றும் அவர் முன்னர் கனடாவில் வசித்துவந்தவர் என்ற தகவல்களும் தற்போது கசிந்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் கனடாவில் வசித்து வந்த குறிப்பிட்ட நபர், கனடாவில் அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். இந் நிலையில் அவருக்கும் இலங்கைப் புலனாய்வுத் துறைக்கும் நெருக்கம் ஏற்பட்டது என்றும், இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தியே இலங்கைப் புலனாய்வுத் துறை அவரை பிரான்சுக்கு அனுப்பியது என்றும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட நபர் பின்னர் கொழும்பில் இருந்து பிரான்ஸ் வந்து அங்குள்ள தமிழ் அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டு உருமறைப்பில் இருந்திருக்கிறார்.

இவரின் உதவியுடன், பிரான்சில் ஒரு இளையவர்கள் அடங்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இக் குழுவானது, லாச் செப்பலில் உள்ள பல தமிழ் கடைகளில் கப்பம் பெற்றும் வந்துள்ளார்கள். இவர்களின் அடாவடியைத் தாங்கமுடியாத சில தமிழ் வர்த்தகர்கள் பிரெஞ்சுப் பொலிசாரிடம் முறைப்பாடும் செய்துள்ளார்கள். குறிப்பிட்ட இக் குழுவும் மற்றும் கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட நபரும் இணைந்தே, இலங்கை அரசு கொடுத்த தகவல் மற்றும் பணத்துக்காக கேணல் பரிதியைக் கொலைசெய்தார்கள் என்று அதிர்வு இணையத்துக்கு இரகசியத் தகவல்கள் சில கிடைக்கப்பெற்றுள்ளது. இவர்களில் சிலரை பிரெஞ்சுப் பொலிசார் தற்போது கைதுசெய்துள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவை தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் வெளிவரும்.


|    செய்தியை வாசித்தோர்: 90923

DMCA.com