விரிவான செய்திகள்

 

சி.ஐ.ஏ க்கு உதவிய இலங்கை ! திடுக்கிடும் ஆதாரங்கள் !

07 February, 2013 by adminஅமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ முஸ்லீம் இளைஞர்களைக், கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்த 54 நட்டுகள் உதவிபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையின் பெயர் 16 வது இடத்தில் உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சரிவாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !

அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ, பல நாடுகளில் உள்ள முஸ்லீம் இளைஞர்களை நாடு கடத்தி அவர்களை குவாண்டமா சிறையில் அடைத்து வருகிறது. இது 2002ம் ஆண்டில் இருந்து இரகசியமாக நடைபெற்று வருகிறது. தாய்வான், கம்போடியா , மலேசியா , அக்பானிஸ்தான், மற்றும் பாங்கொக் ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்கா பல தீவிரவாதிகளை நாடு கடத்தி தமது சிறைக்கு இரகசியமாக மாற்றி வந்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளில் உள்ள பொலிசாரின் உதவியோடு இவை நடைபெற்றுள்ளது. ஆனால் இவற்றில் பல கைதுகள், அன் நாட்டுப் பொலிசாருக்கு தெரியாமலே நடைபெற்றுள்ளது என்பது தான் ஆச்சரியமான விடையம். அமெரிக்க சி.ஐ.ஏ உளவுப் பிரிவினர் ஒருவர் மேல் கண் வைத்தால், அவர் எந்த நாட்டில் இருந்தாலும் அவரை கடத்திக்கொண்டு வருவதில் கில்லாடிகள் என்பது ஊரறிந்த உண்மையாகும். அப்படி கடத்த முடியவில்லை என்றால் போட்டுத்தள்ளுவார்கள்(பின் லேடனைப் போல)

இவ்வாறு கடத்தப்படும் நபர்களை, அன் நாடுகளில் இருந்து வெளியே கொண்டுவர , தனியார் விமானசேவை ஒன்றின் விமானங்களை பலகாலமாக பயன்படுத்தி வந்துள்ளது சி.ஐ.ஏ. ரிச் மோர் ஏவியேஷன் என்னும் இந்த தனியார் விமான செவையின் விமானங்களைப் பாவித்தே அமெரிக்க சி.ஐ.ஏ அமைப்பு முஸ்லீம் இளைஞர்களைக் கடத்தியுள்ளது. குறிப்பிட்ட இந்த விமானசேவை, 2003 ல் பல தடவையும் மற்றும் 2006ம் ஆண்டில் பலதடவையும் இலங்கை கட்டநாயக்க விமானநிலையதில் தரித்து நின்று சென்றுள்ளது. இவ்விமானம் அமெரிக்க சி.ஐ.ஏ வுக்கு சொந்தமான விமானம் என்பது இலங்கை அரசுக்கு நன்றாகவே தெரியும். அதில் கொண்டுசெல்லப்படும் , முஸ்லீம் இளைஞர்கள் கடும் சித்திரவதைக்கு ஆளாகுவார்கள் என்பதும் இலங்கை அரசுக்கு தெரிந்த விடையம். இருப்பினும் இலங்கை அரசு சி.ஐ.ஏ யின் விமானம் வந்துசெல்ல அனுமதித்துள்ளது. மேலும் கட்டநாயக்க விமானநிலையத்தில் வேறு எந்த உதவிகள் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை.

இது இவ்வாறிருக்க, அமெரிக்கா முஸ்லீம் இளைஞர்களுக்கு எதிராக பாரிய சித்திரவதைகளை மேற்கொண்ட நாடாக கருதப்படுகிறது என மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளது. இன் நிலையில், இதற்கு உதவி புரிந்த நாடுகள் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதில் இலங்கையும் அடங்குவது தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்க நீதித்துறையின் அறிக்கை ஒன்றில் இருந்தே.. அதிர்வு இணையம் இத் தகவல்களைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். அதில் இலங்கை அரசானது அமெரிக்க சி.ஐ.ஏ பிரிவிற்கு எவ்வகையான உதவிகளைச் செய்தார்கள் என்பது போன்ற விபரங்களை குறிப்பிட்டுள்ளார்கள். இவை மிகவிரைவில் அதிர்வு இணையத்தில் வெளியாகும்.


|    செய்தியை வாசித்தோர்: 75610

DMCA.com