விரிவான செய்திகள்

 

ராஜபக்ஷ திருப்பதியில் செய்த விளையாட்டு !

10 February, 2013 by adminராஜபக்ஷ திருப்பதி போகிறார்.... அதனால் தமிழ் நாட்டிலும் சரி ரெணி குண்டாவிலும் சரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தது இது தான் எமக்கு தெரிந்த செய்தி ! ராஜபக்ஷவுக்கு யார் லட்டுக்கொடுத்தார்கள் ? யார் யார் அவரை வரவேற்றார்கள் ? மொத்தத்தில் அங்கே என்ன தான் நடந்தது ? இதோ நடந்தவற்ரை அதிர்வின் வாசகர்களுக்காக இங்கே தருகிறோம் ...

ராஜபக்ஷே வருவதையொட்டி, நேற்று ரேணிகுண்டா, மற்றும் திருப்பதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருப்பதி திருமலை வரை வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 2 போலீஸ் சூப்பிரண்டு, டி.எஸ்.பி.க்கள் உள்பட 300 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்ஷே நேற்றுமாலை, மாலை தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் திருப்பதி திருமலைக்கு வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ஷே நேற்று முன் தினம் இரவு திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கிறார். மறு நாள் அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்றிருக்கிறார். அவரை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜு, செயல் அலுவலர் சுப்பிரமணியம் ஆகியோர் வரவேற்று உள்ளனர். காலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் ராஜபக்ஷே பங்கேற்று, சாமி தரிசனம் செய்தாராம். பாபிராஜு பிரசாதம் வழங்கியிருக்கிறார் ! அதாவது லட்டு தான்.... சும்மா இல்லை 60 ஸ்பெஷல் லட்டு இதற்காக தயாராகியுள்ளது. கையில் கிடைத்த லட்டை மகிந்தர் டேஸ்ட் பார்த்திருக்கிறார்...

சாமி தரிசனம் முடிந்ததும் பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். காலை 9.30 மணிக்கு கார் மூலம் ரேணிகுண்டா செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு செல்கிறார். இது தான் மொத்தத்தில் நடந்து முடிந்துள்ள விடையம் ஆகும் ! ராஜபக்ஷேவுடன் மொத்தம் 60 பேர் வருகின்றனர் என தேவஸ்தானத்துக்கு தகவல் கூறப்பட்டுள்ளதாம். அதனால் தான் 60 லட்டை அவர்கள் தயார் செய்து வைத்திருந்திருக்கிறார்கள்.

ராஜபக்ஷேவின் திருப்பதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தூர் மாவட்டம, நகரி, காளஹஸ்தி, உள்பட பல்வேறு நகரங்களில் ம.தி.மு.க. சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தி விட்டனர் எனவும் மேலும் அதிர்வு இணையம் அறிகிறது ! மொத்தத்தில் வந்தார் தின்றார் சென்றார் ! அவ்வளவு தான் !

அதிர்வுக்காக:

வல்லிபுரத்தான் .


|    செய்தியை வாசித்தோர்: 95178

DMCA.com