விரிவான செய்திகள்

 

பாதுகாப்பை உடைத்தெறிந்​து ராஜபக்சே கார் முன் பாய்ந்த தமிழர் !

11 February, 2013 by admin

திருப்பதி கோவிலுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொந்தளிப்பான போராட்டங்கள் நடைபெற்றது யாவரும் அறிந்ததே. மதிமுக பொதுசெயலாளர் வைகோ இந்திய பிரதமர் வீட்டை முற்றுகையிட சென்று நூற்றுகணக்கான தனது தொண்டர்களுடன் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதேவேளை திருப்பதிக்கு சென்று போராட்டம் நடத்த முயன்ற ஆயிரகணக்கான மதிமுகவினரை போலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு மண்டபதில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். கரூர் மாவட்ட அரவக்குறிச்சி ஒன்றிய மதிமுக செயலாளர் திரு.கலையரசன்,மற்றும் கரூர் நகர செயலாளர் திரு.பாலமுருகன் தலைமையிலான அணியினர் தாங்கள் அடைத்து வைக்கபட்டிருந்த இடத்தில இருந்து போலீஸ்,ராணுவ காவலை மீறி சுவர் ஏறி குதித்து விடிய விடிய மலை காட்டு பாதைகளில் மறைந்து காத்திருந்து ராஜபக்ஷே வரும் பொழுது திடீரென அவன் கார் முன் பாய்ந்து கருப்பு கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்தியாவுக்குள் ராஜபக்சேவுக்கு இதுவரை நேரடியாக எவரும் கருப்பு கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். அனைத்து பாதுகாப்பு வளையங்களையும் உடைத்தெறிந்து விட்டு உள்ளே புகுந்து எதிர்ப்பை காட்டி, ராணுவத்திற்கும் போலீசாருக்கும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்திய கலையரசன் ,பாலமுருகன் அணியினரை வைகோ தொலைபேசியில் அழைத்து பாராட்டினார் என அதிர்வு இணையம் அறிகிறது. இதே அணியினர் தான் கடந்த முறை ராஜபக்சே சாஞ்சிக்கு வந்தபொழுது , அந்த மாவட்டம் முழுவதும் யாருமே நெருங்க முடியாத காவலுக்கு மத்தியில் அவன் இருக்கும் இடத்திற்கு வெகு அருகே வரை முன்னேறி சென்றபொழுதும் கைது செய்யப்பட்டனர்.
|    செய்தியை வாசித்தோர்: 77014

DMCA.com