விரிவான செய்திகள்

 

கைதிகளின் உயிரணுக்களை கடத்தி கருத்தரிக்கும் !

15 February, 2013 by admin

இஸ்ரேல் நாட்டின் சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பாலஸ்தீன கைதிகளின் உயிரணுவை கடத்தி வந்து செயற்கை முறை மூலம் கருத்தரித்து பிரசவிக்கும் பாலஸ்தீன பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. இஸ்ரேலின் அண்டை நாடான பாலஸ்தீனத்தை சேர்ந்த சிலர், இஸ்ரேலுக்குள் நுழைந்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இச்சம்பவங்களில் பிடிபடும் பாலஸ்தீனியர்களில் பலர் தேச துரோக குற்றத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இஸ்ரேல் சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனார்.

சராசரியாக இஸ்ரேல் குடிமக்களுக்கு சிறைகளில் வழங்கப்படும் எவ்வித சலுகையும் பாலஸ்தீனிய கைதிகளுக்கு வழங்கப்படுவது கிடையாது. இஸ்ரேலிய கைதிகள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை சிறை வளாகத்தினுள் உள்ள குடியிருப்புகளில் தங்களது உறவினர்களை சந்தித்து பேசவும் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்ட கைதிகள்,தங்களின் மனைவியுடன் தனிமையில் இருக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், பாலஸ்தீன கைதிகளில் எவருக்கும் இவ்வகை அனுமதி அளிக்கப்படுவதில்லை.

இதனால், சிறைவாசம் அனுபவிக்கும் பாலஸ்தீன கைதிகள் தங்களின் அடுத்த தலைமுறைக்கான வாரிசுகளை உருவாக்க வாய்ப்பளிக்கப்படாமல் சிறைக்குள்ளேயே வாழ்நாளை கழித்து பிணமாக தான் விடுதலை ஆகின்றனர்.


|    செய்தியை வாசித்தோர்: 19686

DMCA.com