விரிவான செய்திகள்

 

உல்லாசத்துக்கு அழைத்ததால் மாமியார் ஆள்வைத்து போட்டு தள்ளினார் !

21 February, 2013 by admin

இந்தியாவின், பெங்களூரைச் சேர்ந்த பெண்ணொருவர், தன்னை அடிக்கடி உறவுக்கு அழைத்து தொந்தரவு செய்த தனது மருமகனை ஆள் வைத்து வெட்டிக் கொன்றுள்ளார். இதையடுத்து பொலிஸார் அந்த பெண்ணையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்துள்ளனர். பெப்ரவரி 1ம் திகதி ஒசூர் அருகே உள்ள மாசிநாயக்கன்பள்ளி என்ற இடத்திலிருந்து கெலமங்கலம் செல்லும் சாலையில் ஒரு ஆணின் உடல்கிடந்தது. இதையடுத்து பொலிஸார் அதை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கொல்லப்பட்டவரின் பெயர் ரியாஸ் அகமது என்றும், பெங்களூர் துபாய் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் 36 வயதானவர் என்றும் தெரியவந்தது.

இவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை விசாரித்த வேளை பரபரப்பான பல தகவல்கள் வெளியாகின. அன்வர் பாட்ஷா – குல்ஷார் தம்பதியின் மூத்த மகளைத்தான் ரியாஸ் மணந்திருந்தார். அன்வர் பாஷா 14 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். குல்ஷார் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் தனது மனைவியின் தாயாரை தவறாக பார்க்க ஆரம்பித்தார் ரியாஸ். மேலும் தவறான உறவுக்கும் அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குல்ஷார் மருமகனைக் கண்டித்தார். மகளிடம் சொல்லி விடுவேன் என்றும் எச்சரித்தார். ஆனாலும் ரியாஸின் செயல்நிற்கவில்லை.

இதனால் கோபமடைந்த குல்ஷார், பெங்களூர் திலக் நகரை சேர்ந்த ஷேக் ஷபீர் என்பவர் மூலம், இரண்டு இலட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படையினரை ஏவி, ரியாஸ் அகமதுவை கொலை செய்ய திட்டமிட்டார். ஷேக் ஷபீர், குருப்பாளையத்தை சேர்ந்த 2 பேரை ஏவினார். அவர்கள் ரியாஸைக் கண்காணித்து வந்தனர். பின்னர் கடந்த 11ம் திகதி ரியாஸ் அகமதுவை இரவில் பின் தொடர்ந்து சென்று தாக்கினர். அதன் பின்னர் கெலமங்கலம் சாலைக்குக் கொண்டு வந்து சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து முகத்தை சிதைத்து உடலை வீசி விட்டுப் போய் விட்டனர். விசாரணையின் இறுதியில் குற்றவாளிகள் நான்கு பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.


|    செய்தியை வாசித்தோர்: 74690

DMCA.com