விரிவான செய்திகள்

 

நார்வே ரகசிய உளவு மையம், மீண்டும் காட்சிக்கு

02 March, 2013 by adminநார்வே நாட்டின் வட பகுதியில் உள்ள ரகசிய உளவு பார்க்கும் மையம் ஒன்று, மீண்டும் இயங்க தொடங்கவுள்ளது என்ற பேச்சு, உளவு வட்டாரங்களில் அடிபடுகிறது. 1990களின் இறுதியில் உருவாக்கப்பட்ட இந்த ரகசிய உளவு பார்க்கும் மையம், ஆரம்பத்தில் சில ஆண்டுகள் ரகசியமாக இயங்கிய நிலையில், பின்னர் அம்பலப்படுத்தப்பட்டிருந்தது. நார்வேயின் வடபகுதியில் உள்ள வார்டோ பகுதியில் அமைக்கப்பட்ட இந்த உளவு மையம், அமெரிக்க விமானப்படை (USAF), மற்றும் நார்வே ராணுவ உளவுப்பிரிவால் பயன்படுத்தப்பட்டது.

அந்த நாட்களில், ரஷ்யாவின் நடமாட்டங்களை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்ட இந்த உளவு மையம், ரஷ்யா துண்டுதுண்டாக உடைந்து, வல்லரசு போட்டியில் இருந்து விலகியபின், இயங்குவதை நிறுத்திக் கொண்டது. அதன்பின், நார்வேயின் வட பகுதியில் உளவு மையம் ஒன்றை இயக்க அமெரிக்காவுக்கு எந்த தேவையும் இருக்கவில்லை. நார்வேயின் வட பகுதியில், 70.3671°N 31.1271°E லொகேஷனில் அமைந்துள்ள இந்த உளவு மையத்தின் பெயர், Globus II. மேலே போட்டோவில் உள்ள இந்த உளவு மையம் அமைந்துள்ள வார்டோ என்ற இடம், ரஷ்ய எல்லை அருகே உள்ளது.

இப்போது, திடீரென இந்த உளவு மையம் திருத்தி அமைக்கப்படுவதாக தகவல். இதன் பின்னணியில் இருப்பது யார்? நார்வே, சுயமாக மீண்டும் ஒரு உளவு மையத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லாத நாடு. மீண்டும் அமெரிக்கா இங்கிருந்து இயங்க உள்ளதா? அப்படியானால், இம்முறை உளவு பார்க்கப் போவது யாரை ? உளவு மையம் இயங்கத் தொடங்கியபின்னரே விஷயம் புரியும். அநேகமாக அடுத்த மாத இறுதிக்குள் உளவு மையம் தயாராகி விடும் என்கிறார்கள் உளவு வட்டாரத்தில்.


|    செய்தியை வாசித்தோர்: 25732

DMCA.com