விரிவான செய்திகள்

 

அப்படி பார்த்தால் கத்தியால் குத்துவேன் ?

04 March, 2013 by admin

லண்டன் பேர்மிங்ஹாம் நகரில் உள்ள காலேஜ் ஒன்றில், தன்னை முரட்டுத்தனமாகப் பார்த்த மாணவனைக் சக மாணவன் கத்தியால் குத்தியுள்ளார். வலன்டைன் கன்னிங் என்னும் மாணவன் குறித்த காலேஜ் ஒன்றில் கல்விகற்று வருகிறான். அவன் நூலகம் சென்றவேளை அங்கே நின்ற 17 வயது மாணவன் ஒருவன், வலன்டைனை முரட்டுத்தனமாகப் பார்த்துள்ளாராம். இதனையே சாட்டாகவைத்து காலேஜ் வாசலில் காத்து நின்ற வலன்டைன், குறிப்பிட்ட மாணவன் வெளியே வந்தவேளை கத்தியால் குத்தியுள்ளார். இச் சம்பவம் தெள்ளத்தெளிவாக CCTV கமராவில் பதிவாகியுள்ளது. கத்தியால் குத்திய வலன்டைன், அம் மாணவன் இறக்கவேண்டும் என்று கூறிவிட்டு அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டான்.

இச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வலன்டைன் என்னும் மாணவனே சக மாணவனைக் கத்தியால் குத்தினார் என்பது தெளிவாகியதை அடுத்து அவருக்கு 7 வருட சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். லண்டனில் கத்திக் குத்து, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


|    செய்தியை வாசித்தோர்: 10358

DMCA.com