விரிவான செய்திகள்

 

தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல் !

04 March, 2013 by adminஜெனீவா: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்று தான் நம்புவதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை மீறல் கவுன்சிலில் இன்று (திங்கள்) அன்று விவாதத்திற்கு வர உள்ளது. இந்நிலையில், விவாதத்தை தடுக்கும் ராஜபக்சேவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது என அறியப்படுகிறது. தோல்வி விரக்தியில் இருக்கும் ராஜபக்சே, இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என நம்புவதாக தெரிவித்து காமெடி அடித்துள்ளார் !

காஷ்மீர் பிரச்சனையை ஈழத் தமிழர் விவகாரத்துடன் இணைத்து பேசியுள்ள அவர், இலங்கை மீது இந்தியா அத்துமீறாது என்ற துணிவில் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு இடையே, தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'நோ ஃபயர் ஸோன்' என்ற ஆவணப் படம் ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்பட்டுள்ளது. ஆவண படத்தை திரையிட தடையிட முயன்ற இலங்கையின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவில்லை. படத்தை பார்த்த உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் இன படுகொலை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என மேலும் அறியப்படுகிறது.

இந்நிலையில் திரைப்படத்தின் இயக்குனர் கெலம் மேக்கரே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இனியாவது ஒன்றுப்பட்டு இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 27ந் தேதி முதல் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது. வரும் திங்கள் அன்று இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட இருக்கிறது. அதனை அடுத்து தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கும். இதன் முடிவுகள் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால் இலங்கை நடத்தியுள்ள போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், உள்ளிட்ட குற்றங்கள் பற்றி விசாரிக்க சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழுவை அனுப்ப வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதனை உறுதிசெய்ய முடியவில்லை.

இலங்கைக்கு எதிரான பெரும்பாலான நாடுகள் கண்டன குரல்களை பதிவு செய்துள்ள நிலையில், இந்த தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலையை மத்திய அரசு இன்னும் வெளியிடாமல் மவுனம் காத்து வருவது வேதனை அளிக்கிறது.


|    செய்தியை வாசித்தோர்: 59006

DMCA.com