விரிவான செய்திகள்

 

தாய் இறந்த பின்னர் பிறந்த குழந்தை !

04 March, 2013 by admin

அமெரிக்கா நியூயோர்க் நகரில் டாக்சியில் சென்றுகொண்டு இருந்த, கணவன் மனைவி இருவரும் கொலப்பட்டுள்ளார்கள். ஆனால் கர்பிணியாக இருந்த அப் பெண் இறந்த பின்னர் மருத்துவர்கள் அச் சிசுவை சத்திரசிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளார்கள். நேற்றைய தினம் 21 வயது நிரம்பிய தம்பதிகள் இருவரும் டாக்சி மூலம் மருத்துவமனை ஒன்றுக்குச் சென்றுகொண்டு இருந்திருக்கிறார்கள். ஆனால் படு வேகமாக வந்த மற்றுமொரு கார், இவர்கள் பயணித்த டாக்சி மேல் மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த இவ்விருவரில், கணவன் முதலில் இறந்துவிட்டார். வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் மனைவியும் இறந்துவிட்டார்.

குறிப்பிட்ட அப் பெண் இறக்கும்போது 7 மாதக் கர்பிணியாக இருந்திருக்கிறார். பிள்ளை பெறுவதற்கு இன்னும் 3 மாதங்கள் இருந்திருக்கிறது. அவசரமாக அம்புலனஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்ட இவரது உடலை உடனடியாக, சத்திர சிகிச்சைக்கு மருத்துவர்கள் உட்படுத்தி அக்குழந்தையை உயிருடன் மீட்டுள்ளார்கள். தற்போது குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அக் குழந்தை ஆண் குழந்தை என்றும், அதனை தம்பதிகளின் பெற்றோர் பராமரிக்க இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

யூத இனத்தைச் சேர்ந்த இத் தம்பதிகளுக்கு நேர்ந்த கெதியை, கேள்விப்பட்ட யூத மக்கள், உலகளாவிய ரீதியாக பல இடங்களில் இருந்து இக் குழந்தைக்கு நிதி உதவிகளைச் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இதனால் ஏற்கனவே பல நிதி உதவிகள் கிடைக்க ஆரம்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. யூத இன மக்கள் தமக்குள் மிகவும் ஒற்றுமையாக் காணப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


|    செய்தியை வாசித்தோர்: 10930

DMCA.com