விரிவான செய்திகள்

 

இணக்கப்பாட்டுக்கு வர இலங்கை - அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை ?

05 March, 2013 by admin

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்க முன்வைக்கவுள்ள யோசனை தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வருவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளும், அமெரிக்க அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏசியன் ட்ரிப்யூன் இணையளத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமைதியான தீர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தைக்காக இலங்கையில் இருந்து பிரதிநிதி ஒருவர் வொஷிங்டன் சென்றுள்ளார். இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் அமெரிக்காவின் யோசனை ஒரளவுக்கு தளர்த்தப்பட உள்ளதுடன், வாக்கெடுப்பின்றி இலங்கை அதனை ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு இணக்கத்தை ஏற்படுத்தி கொள்ள உள்ளதாக கூறப்படும் யோசனையில் இரண்டு பிரதான விடயங்கள் அடங்கலாம் எனக் கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் அதிகாரம் பெற்ற விசேட அதிகாரிகள் எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு விஜயம் செய்ய இடமளித்தல் முதலாவது விடயமாகும். இந்த அதிகாரிகள் இலங்கை அரசுடன் மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பாக மனித உரிமை பேரவைக்கு அறிக்கையிடுல் இரண்டாவது விடயமாகும். இதில் போர் குற்ற விசாரணையும் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.


|    செய்தியை வாசித்தோர்: 19742

DMCA.com