விரிவான செய்திகள்

 

சூடுபிடிக்கும் சந்திரிக்காவின் "தேசிய அரசாங்கம்" என்ற யோசனை !

05 March, 2013 by admin

இலங்கை எதிர்நோக்கியுள்ள "துரதிஷ்டவசமான குழப்பநிலையிலிருந்து மீள்வதற்கு, அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நேர்மையான அரசியல்வாதிகளை உள்ளடக்கியதாக "தேசிய அரசாங்கம்" ஒன்றை அமைப்பதே ஒரே வழி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்திருந்தார். இந்தக் கருத்திற்கு ஆளும், எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் உள்ள முக்கியமானவர்களிடமிருந்து, பொது அமைப்புக்களிடமிருந்தும், சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

முக்கியமாக சந்திரிக்காவின் இந்தக் கருத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களினதும், சமயத் தலைவர்களினதும் பெருவாரியான ஆதரவு கிடைத்துள்ளது. விஜயகுமாரதுங்கவின் 25வது ஆண்டு ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு கண்டியில் கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற நிகழ்விலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஸ்ரீல.சு.க.யின் பிரமுகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்பு கொண்டு, அவ்வாறான யோசனைகள் உண்டெனில் அதற்கு தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், பிரபல புத்த பிக்குமார்கள் சிலரும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்கள் சிலரும் முன்னாள் ஜனாதிபதியின் கூற்றை வரவேற்றுள்ளதுடன் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உற்சாகப்படுத்தியுள்ளதுடன் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனராம்.

இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்று அமைய இப்பதாகப் பேச்சுக்கள் அடிபடுகிறது என்று, சம்பந்தர் ஐயாவின் காதுகளுக்கு எட்டினால் போதும். தனக்கு அமைச்சு பதவிவேண்டும் என்று சொல்லி போய் நின்றுவிடுவார் !


|    செய்தியை வாசித்தோர்: 22928

DMCA.com