விரிவான செய்திகள்

 

புலம்பெயர் ராஜபக்ஸர்களால் லண்டனில் விடுக்கப்படும் அச்சுறுத்தல் !

05 March, 2013 by admin

இலங்கையில் தான் ராஜபக்ஸர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தமிழர்களை அச்சுறுத்துகிறார்கள் என்று நீங்கள் நினைத்துவிடவேண்டாம். தற்போது புலம்பெயர் தேசங்களிலும் சில ராஜபக்ஸர்கள் தோன்றி அட்டூழியங்கள் செய்துவருகிறார்கள். இது 2009ம் ஆண்டு முதல் புலம்பெயர் தேசங்களிலும் ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்லவேண்டும். அக்காலப்பகுதியில் போரை நிறுத்தச் சொல்லி பிரித்தானியாவுக்கு தமிழர்கள் அழுத்தம் கொடுத்தவேளை, உண்ணாவிரதத்தை சீக்கிரம் முடித்துக்கொள்ளும்படி, ஒரு தமிழ் ராஜாபக்ஸ பரமேஸ்வரனிடம் தெரிவித்தார் ! பின்னர் புலிக்கொடி வேண்டாம் என்றார் மற்றுமொரு புலம்பெயர் ராஜபக்ஸ் ! புலிகளின் தடையை நீக்குவது தொடர்பாக டேவிட் மிலபானுடன் பேசவேண்டாம் என்றும் அறிவுரை கூறினார் மற்றுமொரு ராஜபக்ஸ். இவற்றை எல்லாம் வெளிக்கொண்டுவந்த தமிழ் ஊடகங்கள் மீது சீறிப் பாய இவர்கள் தயங்கவில்லை.

பிரித்தானிய தொழிற்கட்சி, பிரமுகர் என்று தன்னை அடிக்கடி வர்ணித்துக்கொள்ளும் இன் நபர், தற்சமயம் ஊடகவியலாளர்களையும் ராஜபக்ஸ பாணியில் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட, ஒரு பேப்பர் ஆசிரியரை, இந்த புலம்பெயர் ராஜபக்ஸ அச்சுறுத்தியுள்ளார். அத்துடன் கடந்த 27ம் திகதி நடைபெற்ற GTF இன் கூட்டத்தில் , பாராளுமன்ற வழாகத்தினுள் வைத்தே, எனது பவரைக் காட்டவா என்று அதிர்வு நிருபரிடமும் பவர் ஸ்டார் ரேஞ்சில் பேசியிருக்கிறார். அருகில் காவலுக்கு நின்ற பொலிசாரை அழைக்க நேரிடும் என்று அதிர்வு நிருபர் கூறவே... தலைதெறிக்க ஓடி மறைந்துள்ளார் இந்த புலம்பெயர் ராஜபக்ஸ.

இவை எல்லாம் இவ்வாறு இருக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஹரோ வில் நடத்திய கூட்டத்தில் விடையம் ஒன்று மேடையில் வைத்தே சொல்லப்பட்டுள்ளது. அது என்ன தெரியுமா ? போனாப் போகுது என்று நாம் ஒரு ஊடகத்துக்கு பேட்டி கொடுத்தோம்(இவர் மறைமுகமாகக் கூறுவது அதிர்வையாம்) ஆனால் அவர்கள் "கிடுக்கிப் பிடி போட்டோம்" என்று செய்தி எழுதியுள்ளார்கள். புலம்பெயர் தமிழ் ஊடகங்களை முதலில் அடக்கவேண்டும் என்று மேடையிலேயே பேசியிருக்கிறார்கள். அதாவது விமர்சனங்களை எதிர்கொள்ள தயாரில்லாத இவர்கள், தமிழ் ஊடகங்களை அடக்க முனைவது ஏன் ? தமிழ் ஊடகங்களின் வாயை இவர்கள் அடைக்க நினைப்பது, தமிழர்களின் கருத்துரிமைகளை அடக்குவதற்குச் சமமான விடையம். அதாவது சம்பந்தர் ஐயாவிடம் தமிழர்கள் கேட்க்க நினைத்த கேள்விகளையே அதிர்வு இணையம் கேட்டது. அதற்கு கூட பலகாரத்தைப் பற்றித் தான் அவர் பேசினார். தமிழர்களின் தீர்வுத் திட்டத்தை பலகாரம்(நொருக்கு தீனி) ஏன் ஒப்பிட்டு பேசினார் என்று எங்களிடம் கேட்டுவிடாதீர்கள் ! நாம் கேள்வி கேட்டது ஒரு மத்தியான வேளை பாருங்கோ. அப்ப அவருக்கு அது தான் நினைப்பில் இருந்திருக்கும் !

ஊடகவியலாளர்களுக்கும், சுகந்திர ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுவது பிரித்தானிய மற்றும் உலகளாவிய சட்டதிட்டங்களுக்கு எதிராணது. அச்சுறுத்தல் விடுவோர் பொலிசாரால் கைதுசெய்யப்படலாம். அதுவும் அவர்கள் இன் நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தால் கூட கைதுசெய்யப்படுவார்கள் என்பது இந்த புலம்பெயர் ராஜபக்ஸர்களுக்கு தெரியவில்லையா ? இல்லை தெரியாதது போல நடிக்கிறார்களா ?

அதிர்வுக்காக:

வல்லிபுரத்தான்.


|    செய்தியை வாசித்தோர்: 39801

DMCA.com