விரிவான செய்திகள்

 

ஜெனீவாவில் மனித வெள்ளம் ! வீதிகள் அனைத்தும் தமிழர்களால் முடக்கம் !

05 March, 2013 by admin

இலங்கை அரசாங்கத்தின் அடாவடித்தனத்தைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன விசாரணையை துரிதப்படுத்த வேண்டி ஜெனீவா புகையிரத நிலைய சந்தியில் இதுவரை காணாத பல்லாயிரம் மக்கள் உலகின் பல பாகங்களிலுமிருந்து திரண்டனர். மக்கள் வெள்ளத்தால் அவ்விடம் ஸ்தம்பித்துப்போயுள்ளது ! இங்கு கலந்து கொண்ட கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியானஸ், இலங்கை அரசின் அடாவடித்தனம் நீடிக்குமானால் பொது நலவாய நாடுகள் அமைப்பிலிருந்தும், ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும் நிரந்தரமாக விலக்கி வைக்க நாம் தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்த கருத்து விண்ணைப் பிளக்க வரவேற்ப்புப் பெற்றது !

இன்று 2.00 மணியளவில் சுவிஸ் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவால்(TCC) ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை அரசு தமிழ் இனத்தின் மீது நடத்திய இன அழிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன விசாரணையை துரிதப்படுத்த வேண்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து பல்லாயிரம் மக்கள் புடைசூழ பலரின் கரங்களில் பாலச்சந்திரன் படுகொலையை சித்தரிக்கும் பல வகை பதாதைகளைத் தாங்கியவாறு உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்த மக்களின் பிரசன்னத்துடன் ஆரம்பமானது.

தற்போதும் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இன் நிகழ்வுகளின் காணொளிகள் சற்று நேரத்தில் அதிர்வில் வெளியாக உள்ளது. அதுவரை அதிர்வு இணையத்துடன் இணைந்திருங்கள்.


|    செய்தியை வாசித்தோர்: 39012

DMCA.com