விரிவான செய்திகள்

 

அல்-காய்தாவின் அதி பயங்கர தளபதி கொலை

05 March, 2013 by adminஅல்-காய்தாவின் ‘அதி பயங்கர தளபதி’ என வர்ணிக்கப்பட்ட அப்தெல்ஹமீட் அபு சையத், கொல்லப்பட்டிருக்கலாம் என அறிவித்துள்ளது பிரான்ஸ் ராணுவம். அல்-காய்தாவின் ஆபிரிக்க தளபதியான இவர், மாலியில் பிரான்ஸ் ராணுவம் நடத்தும் யுத்தத்தின்போது கொல்லப்பட்டிருக்கலாம் என பிரான்ஸ் ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால், கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படும் தளபதி அபு சையத்தின் உடல், பிரான்ஸ் ராணுவத்திடம் சிக்கவில்லை.

இந்த அபு சையத், கடத்தல்காரராக இருந்து, அல்-காய்தாவுக்கு சென்றவர். அல்-காய்தாவுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை பணயக் கைதிகளை கடத்துவதன்மூலம் பெற்றுக் கொடுத்தவர். 2008-ம் ஆண்டுவரை 20 ஐரோப்பிய, அமெரிக்க பணயக் கைதிகளை கடத்தியுள்ள இவர், இரு பணயக் கைதிகளை கொன்றிருக்கிறார்.

தற்போது மாலி நாட்டில், அத்ரார் டெ இஃபோகாஸ் மலைப் பகுதியில், அல்-காய்தா ஆதரவு தீவிரவாத அமைப்பினருக்கும், பிரான்ஸ் ராணுவத்துக்கும் நடைபெறும் யுத்தத்தில் இவர் கொல்லப்பட்டதாக தமக்கு உளவுத் தகவல் கிடைத்திருப்பதாக பிரான்ஸ் ராணுவ தளபதி Edouard Guillaud தெரிவித்தார். இப்போதுள்ள சிக்கல் என்னவென்றால், இந்த அபு சையத் கொல்லப்பட்டபோது, அவரிடம் 7 வெளிநாட்டு பணயக் கைதிகள் இருந்தனர். அவர்களது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.


|    செய்தியை வாசித்தோர்: 28655

DMCA.com