விரிவான செய்திகள்

 

மக்களை துன்புறுத்தும் இராணுவம் ! மேலதிக புகைப்பட ஆதாரங்கள் !

07 March, 2013 by admin

இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்தவேளை சில பொதுமக்கள் புலிகள் பக்கத்தில் இருந்து இராணுவத்தின் பக்கம் சென்றார்கள். இவ்வாறு சரணடைந்தவர்களில் பலரை இராணுவம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனச் சந்தேகித்து சுட்டுக்கொன்றுள்ளது. இவர்களில் பலரை நிர்வாணமாக்கிச் சோதனை நடத்தி பாலியல் கொடுமைகளைப் புரிந்துள்ளது இலங்கை இராணுவம். நாம் இங்கே பிரசுரித்துள்ள புகைப்படங்களில், இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் தமிழ் மக்கள் வரும் காட்சி தெள்ளத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இவ்வாறு வரும் நபர்களை, மறைவான இடம் ஒன்றிற்கு இராணுவம் அழைத்துச் சென்றுள்ளது. சிலரை பழைய கட்டடங்களில் வைத்து சித்திரவதை செய்துள்ளார்கள். மேலும் பலரை மரத்திற்கு கீழ் உட்காரவைத்து, ஆண்கள் கைகளை கட்டிப்போட்டு இருக்கிறார்கள்.

அவர்களுடன் கூட வந்த பெண்களை, போகச் சொல்வதும் ஆண்களை தாம் விசாரிக்க வேண்டும் என்று இராணுவம் உத்தரவிடுவதும் இப் புகைப்படங்களில் தெளிவாக பதிவாகியுள்ளது. இவற்றை வழங்கிய முன் நாள் இராணுவச் சிப்பாய் ஒருவர், இங்கே என்ன நடைபெற்றது என்பதனையும் விவரித்துள்ளார். தாம் கைதுசெய்த இளைஞர்கள் சிலரை என்ன செய்வது என்பது தொடர்பாக , தமது தலைமையோடு தொலைபேசியில் இராணுவ அதிகாரிகள் அடிக்கடி உரையாடிவந்தனர் என்றும். அவர்களில் பலரை கொன்றுவிடுமாறு உத்தரவு வந்ததால், பலடை இலங்கை இராணுவம் கொலைசெய்துவிட்டதாகவும், தப்பி வந்த சிப்பாய் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார். (புகைப்படங்கள் இணைப்பு)
|    செய்தியை வாசித்தோர்: 98644

DMCA.com