விரிவான செய்திகள்

 

பாலச்சந்திரனை சுட்ட துவக்கு MP5 யூசி ரகமா ?

16 March, 2013 by adminஇராணுவத்திடம் சரணடைந்த பாலச்சந்திரன் மீது MP5 யூசி ரக துப்பாக்கி கொண்டு சுடப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய தலைவரது பாதுகாப்புப் பிரிவில் பல காலம் கடமையாற்றிய போராளி ஒருவர், 2009ம் ஆண்டு மாசி மாதம் அளவில் முல்லைத்தீவில் இருந்து கடல்மார்க்கமாக பிறிதொரு நாடு சென்றிருக்கிறார். அக்காலகட்டத்தில் புலிகள் கைகளில் பெரும் ஆயுதத் தட்டுப்பாடு நிலவியுள்ளது. தமக்கு வழங்கல்களை சீர் படுத்தச் சொல்லி அதன் நிமிர்த்தமாக அப்போது சில போராளிகள் வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். இவர்களின் ஒருவர் வழங்கிய பல தகவல்கள் திடுக்கிடவைத்துள்ளது. இறுதி மாதங்களில் தலைவரோடு இணைந்து இயங்கிய ரட்ணம் மாஸ்டர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் பல தாக்குதல் நடந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சில இடங்களில் விடுதலைப் புலிகள் 30 மற்றும் 50 கலிபர் துப்பாக்கிகள் கொண்டு தாக்குதல் நடத்திய போதிலும், இலங்கை இராணுவமானது இலகுரக ஆயுதங்களைப் பாவித்தே முன்னேறியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர்கள் மிக விரைவாக முன்னேறியதாகவும் அவர்களுக்கான வழங்கல்கள்( ரவைகள்) சீராகக் கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவித்த அப்போராளி புலிகளுக்கான வழங்கல்கள் முற்றாகத் தடைப்பட்டிருந்தாகவும் தெரிவித்தார். 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவேளை, அவரை முதலில் விசாரித்த இராணுவச் சிப்பாய்கள் தமது துப்பாக்கிகள் கொண்டு பாலச்சந்திரனின் மெய்ப்பாதுகாப்பாளர்களைச் சுட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் பாலச்சந்திரனை உயர் அதிகாரிகளிடம் கொண்டு சென்று, அவர்களில் ஒருவரே MP5 ரக துப்பாக்கியால் பால்ச்சந்திரனை சுட்டுக்கொன்றுள்ளார் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஏன் எனில் இலங்கை இராணுவத்தில் உள்ள 53ம் படைப்பிரிவில் கடமையாற்றிய உயர் அதிகாரிகளுக்கே MP5 யூசி ரக துப்பாக்கிகள் அவ்வேளையில் வழங்கப்பட்டிருந்தது என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் பாலச்சந்திரனை ஒரு உயர் அதிகாரியே மிகவும் கிட்ட இருந்து சுட்டுள்ளார் என்று சந்தேகம் வெளியிட்டார் அப் போராளி. அதுவும் MP5 யூசி ரகத் துப்பாக்கிகளின் குண்டே மிகவும் சிறியது என்றும், கிட்ட இருந்து சுட்டால் மிகவும் மெல்லிய துளையே ஏற்படும் என்றும், சுட்ட இடத்தில் ரத்தக் கசிவு மிகவும் குறைவாகவே காணப்படும் எனவும் குறிப்பிட்ட போராளி அதிர்வு இணையத்துக்கு மேலும் தெரிவித்தார்.


|    செய்தியை வாசித்தோர்: 68879

DMCA.com