விரிவான செய்திகள்

 

சுடப்பட்ட பின்னர் என்ன நடந்தது ?

19 March, 2013 by adminசமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் அதிர்வலைகளைத் தோற்றுவித்து இருந்தது யாவரும் அறிந்ததே. பாலச்சந்திரனைக் காட்டிலும் வயது குறைந்த இச் சிறுவனோடு சேர்த்து சுமார் 6 பேர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளது. பின்னர் இவர்கள் சுடப்பட்டு இறந்து கிடக்கும் காட்சிகள் மோபைல் தொலைபேசியில் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இக் கொலைகள் நடைபெற்ற பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் தற்போது அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள புகைப்படங்களில், சில காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளது.இசைப் பிரியா உட்பட பலர் இவ்விடத்தில் தான் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் 22க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகளை இராணுவத்தினர் கைகளைக் கட்டி, பின் மண்டையில் சுட்டுள்ளார்கள். பின்னர் தாம் சுட்ட ஆட்களின் புகைப்படங்களை எடுத்துள்ளார்கள்(இது எதற்காக என்று சிலர் நினைக்கலாம்) அது தமது உயர் அதிகாரிகளுக்கு காட்டவே இராணுவத்தினர் இதுபோன்ற வீடியோக்களை மோபைல் போனில் பதிவுசெய்துள்ளார்கள். இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்ட பலரது உடல்களை ரக்டர் வண்டி ஒன்றில் ஏற்றிக் கொண்டுசெல்லும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிட்ட இச் செறுவனின் உடலும் காணப்படுகிறது. இச் சிறுவன் இறப்பதற்கு முன்னர் முழங்கையில் கட்டியிருக்கும் ஒரு நீல நிறத் துணியை வைத்தே இச் சிறுவன் இறந்தபின்னரும் அடையாளம் காணப்படுகிறான்.

ஏதோ முன்னர் ஏற்பட்ட காயத்துக்காகவே இச் சிறுவன் கைகளில் ஒரு நீல நிறத்துணியால் கட்டுப்போட்டு இருக்கிறான். இதன் பின்னச் இச் சிறுவனின் உடலை ஏற்றிக்கொண்டு ரக்டர் வண்டி ஒன்று புறப்படுகிறது. பெரும்பாலும் இவர்களது உடல்கள் எரியூட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. வன்னிப் போர்களத்தில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட பலரது உடலங்கள் இவ்வாறு எரியூட்டப்பட்டது என்று தப்பி வெளிநாடு வந்த இராணுவத்தினர் சிலர் தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
|    செய்தியை வாசித்தோர்: 145910

DMCA.com