விரிவான செய்திகள்

 

மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட பஸ்சில் நாங்கள் இல்லவே இல்லை !

12 April, 2013 by admin

புதுடில்லி:

"டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பஸ்சில், நாங்கள் இல்லவே இல்லை' என, இந்த வழக்கில் கைதான இருவர், சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

டில்லியில், கடந்த, டிசம்பர், 16ம் தேதி, ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அதில், ஒருவன் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மற்றொருவன் சிறுவன் என்பதால், அவன் தொடர்பான வழக்கு, சிறார் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. திகார் சிறையில் உள்ள மற்ற நான்கு பேரில், வினய் சர்மாவும், பவன் குப்தா என்பவனும், இந்த வழக்கு விசாரணை நடைபெறும், டில்லி, சிறப்பு கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அதில்,

அவர்கள் கூறியுள்ளதாவது:

மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் நிகழ்ந்த, டிசம்பர், 16ம் தேதி இரவு, இருவரும் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தோம். அந்த நிகழ்வுகள், மொபைல் போனில் படம் பிடிக்கப்பட்டுள்ளன. அதனால், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பஸ்சில், நாங்கள் இருவரும் இல்லை. இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். அவர்களின் வழக்கறிஞர் கூறுகையில், ""மொபைல் போனில் உள்ளவற்றை பொய் என்றோ, புதிதாக உருவாக்கப்பட்டது என்றோ கூறமுடியாது. ஏனெனில், என், கட்சிக்காரர்கள் கைதான நாள் முதலே, அவர்களின் மொபைல் போன், போலீஸ் வசம்தான் உள்ளது. எனவே, மொபைல் போனில் பதிவாகியுள்ளவற்றை, "சிடி'யாக மாற்ற அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.


|    செய்தியை வாசித்தோர்: 21292

DMCA.com