விரிவான செய்திகள்

 

பலஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா வைத்திருக்கிறது !

12 April, 2013 by admin

அணு ஆயுதத்தை தாங்கிச் சென்று வெடிக்கவல்ல பலஸ்டிக் ரக ஏவுகணைகளை வடகொரியா வைத்திருக்கிறது என்ற தகவலை அமெரிக்க உளவு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து போர் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டதால், வடகொரியா கடும் ஆத்திரம் அடைந்து தனது இராணுவ நிலைகளை தென்கொரியா பக்கம் நகர்தியது யாவரும் அறிந்ததே. இதேவேளை தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர் விமானங்களையும், கப்பல்களையும் அனுப்பியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 9,000 கிலோ மீட்டர்வரை பறந்துசென்று தாக்கவல்ல உன் -ஹா 3 என்ற ஏவுகணைகளை வடகொரியா வெளியே எடுத்துள்ளது. இதுவரை காலமும் அப்படி ஒரு ஏவுகணை அவர்களிடம் இருப்பதாக அரசல் புரசலான செய்தியே வெளியாகியிருந்தது.

ஆனால் வடகொரியாவிடம் [உன் -ஹா 3] என்ற பலஸ்டிக் ஏவுகணைகள் பெரும் ஆபத்தை விளைவிக்ககூடியவை என தற்போது தான் அமெரிக்கா தெரிவிக்கிறது. வடகொரியாவில் இருந்து இந்த ஏவுகணையை ஏவினால், அது அமெரிக்கா மற்றும் கனடா வரை சென்று தாக்க வல்லது என்று அறிக்கைகள் தற்போது தெரிவித்துள்ளன. இதனையடுத்து அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அவர்கள், தென்கொரியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு, பின்னர் அங்கிருந்து G8 நாடுகளின் உச்சிமாநாடு தொடர்பாக கலந்தாலொசிக்கச் சென்றுவிட்டார் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் வடகொரியா விடுக்கும் அச்சுறுத்தலை இதுவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

ஏவுகணைகளில் உள்ள பற்றரிகளை, சார்ஜ் செய்யும் காட்சிகளை வடகொரியா தொலைக்காட்சிகள் காண்பித்து வருகிறது. இதனைக் காட்டிலும் ஆட்டிலறி நிலைகளை வடகொரியாவின் மகளீர் அணி இராணுவமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி மேலும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. அமெரிக்கா தென்கொரியா இவை இரண்டு நாடுகளும் ஒரு பக்கமாகவும் வடகொரியா ஒரு பக்கமாகவும் இருந்துகொண்டு, தமது இராணுவப் பலத்தை வெளி உலகிற்க்கு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களில் ஏதாவது ஒரு நாடு மற்றைய நாட்டு எல்லையில் ஒரு சிறிய துப்பாக்கியால் சுட்டால் கூட , போர் வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது. வடகொரிய மக்கள் அனைவரும் முன் எப்பொழுதும் இல்லாதவாறு ஒற்றுமையாக இருக்கிறார்கள். போர் என்று ஒருன்று ஆரம்பித்தால் தாத்தா முதல்கொண்டு பாட்டி வரை ஆயுதங்களை தூக்க தயங்க மாட்டார்கள். ஏற்கனவே வடகொரிய இராணுவத்தில் சுமார் 1 மில்லியன் பேர் இருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை விட அதிகமான எண்ணிக்கையிலானவர்கள் இராணுவத்தில் இருப்பார்கள் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
|    செய்தியை வாசித்தோர்: 38926

DMCA.com