விரிவான செய்திகள்

 

நம்பி சென்ற காதலியை நண்பர்களோடு கற்பளித்து தூக்கி வீசிய காமப்பிசாசு !

16 April, 2013 by admin

பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் ஒருவர் தன் காதலர் டூபேசுடன் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறினார்.கோபால்கஞ்ச் ரெயில் நிலையத்தில் இருந்து அவர்கள் கொல்கத்தா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சென்றனர்.அந்த ரெயில் புறப்பட்ட போது டூபேசின் நண்பர்கள் 3 பேர் வந்து சேர்ந்து கொண்டனர். ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் டூபேசும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர்.

அவர்கள் பயணம் செய்த பெட்டியில் வேறு யாரும் இல்லாததால், அந்த பெண் கூச்சலிட்டும் பயன் இல்லாமல் போய்விட்டது. சுமார் 2 மணி நேர கொடூரத்துக்குப் பிறகு 4 வாலிபர்களும் அந்த பெண்ணை கொன்று விட தீர்மானித்தனர்.அரைநிர்வாண நிலையில் அந்த பெண்ணை கையையும், காலையும் பிடித்து ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளார்கள். தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

ரெயில்வே போலீசாரால் மீட்கப்பட்ட அந்த இளம் பெண்ணுக்கு முதலில் சமஸ்டிபூர் நகர மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு அவர் பாட்னாவில் உள்ள மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
தன்னுடன் நட்பாக பழகிய டூபேசை நம்பி ரெயில் ஏறியதால் தனக்கு இந்த கொடூரம் நேர்ந்து விட்டதாக அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்தார். என்றாலும் அவரை கற்பழித்த 4 வாலிபர்களும் இன்னமும் கைது செய்யப்படவில்லை.


|    செய்தியை வாசித்தோர்: 32094

DMCA.com