விரிவான செய்திகள்

 

தொப்பிகலையில் பூ வைத்தார் கோட்டபாய [PHOTOS]

18 April, 2013 by adminகடந்த 30 வருடங்களாக புலிகளின் கோட்டை, மறைவிடம் மற்றும் பயிற்சி வழங்கும் இடம் என வருணிக்கப்பட்ட தொப்பிகல பிரதேசத்தை கோட்டபாய ராஜபக்ஷ ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளார். இராணுவத் தூபி, அவர்களுக்கு நினைவுச் சின்னம் வைக்கப்போவதாக அவர் கூறினாலும், இப் பிரதேசம் ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதே உண்மையாகும். இப் பிரதேசத்துக்கு இனி சிங்களவர்கள் படை எடுப்பார்கள். சிலர் அங்குள்ள விடுதிகளில் தங்குவார்கள், மேலும் சிலர் அட இந்த இடம் நல்லா இருக்கே என்று நினைத்து அருகில் உள்ள காணிகளை வாங்கி குடியேறுவார்கள். இதுதான் நடக்கவிருக்கிறது.

தொப்பிகல பிரதேசத்தில் செயற்கையாகச் செய்யப்பட்ட வாவி, மற்றும் சிறு குன்றுகள் விளையாட்டு மைதானம் அடங்கிய ஒரு இடத்தை இன்று கோட்டபாய திறந்துவைத்தார். (புகைப்படங்கள் இணைப்பு)


|    செய்தியை வாசித்தோர்: 21137

DMCA.com