விரிவான செய்திகள்

 

மலையாள மாந்திரீகர்கள் வலையில் விழுமா ஈழத் தமிழினம் ?

19 April, 2013 by admin

இந்தியப் பெருங்கண்டத்தில், உள்ள 32 மாநிலங்களில் ஈழத் தமிழர் தொடர்பாக தொடர்ந்து குரல்கொடுத்துவரும் மாநிலமாக தமிழ்நாடே இருந்துவருகிறது. கேரள மாநிலமானது இன்றுவரை ஈழத் தமிழர் சார்பாக எந்த ஒரு போராட்டத்தையோ இல்லையேல் ஆதரவுப் பிரச்சாரங்களையோ மேற்கொண்டதில்லை எனலாம். கோரளாவில் உள்ள மலையாள இனத்தவர்கள், ஈழத் தமிழர் இனத்தவர்களை ஒத்தவர்கள் என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அவர்களது கலை கலச்சாரங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள் என்பன ஈழத் தமிழர்களை ஒத்தது என்கிறார்கள். நாம் இது தொடர்பாக இளைப்பாறிய அண்ணா பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் துரைசாமி அவர்களை தொடர்புகொண்டோம். அவர் அதனை முற்றாக மறுத்துள்ளார். புராண காலங்களில் இருந்தே "குமரிக் கண்டம்" என்ற ஒரு கண்டம் இருந்ததாகவும், அதன் தொடர்ச்சி அவுஸ்திரேலியா வரை நீண்டு சென்றதாகவும் அவர் இது தொடர்பாக அதிர்வு இணையத்துக்கு விவரித்துள்ளார்.

இலங்கை, இந்தியா , ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒரு காலத்தில் இணைந்திருந்ததாகவும், பாரிய அனர்த்தம் காரணமாகவே அவை நீருக்குள் மூழ்கியதாகவும் தெரிவித்த அவர், தென்னிந்தியவில் தமிழர்கள் வாழ்ந்த காலத்திலேயே ஒரு பகுதியான ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று தெரிவித்துள்ளார். மலையாளிகள் என்று சொல்லப்படுகின்ற, கேரள இன மக்களுக்கும் சிங்களவர்களுக்குமே மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். காரணம் பிட்டு, அப்ப தோசை, பால்சோறு போன்ற உணவுப் பழக்கவழக்கங்கள், சிங்கள மக்கள் மத்தியிலேயே காணப்படுகிறது. இதனை தவிர கேரள நடனத்தை பார்த்தால், அது சிங்கள கண்டியன் நடனத்தை ஒத்ததாக இருக்கும். அத்துடன் ரவிக்கை மற்றும் பாவாடை அணியும் பழக்கவழக்கங்களும் சிங்கள மற்றும் கேரள மக்களின் பழக்கவழக்கங்களே ஆகும் என்றார் அவர்.

இந்தியாவின் "கொள்கை வகுப்புச் செய்லாளர் குழு" என்ற ஒரு வட்டம் கடந்த 35 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. பல இந்தியர்களுக்கு இது தெரியாத விடையமாகவே உள்ளது. அதாவது இந்தியாவின் கேரள மாநிலத்தில் வசிக்கும் சிலராலேயே இந்தியாவின் கொள்கை வகுப்புகள் நிறுவப்படுகிறது. வெளியுறவுக் கொள்கையாக இருக்கலாம், இல்லை என்றால் விடுதலைப் புலிகள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட இருக்கலாம். இவை அனைத்துமே கேரள மலையாளிகள் சிலராலேயே வகுக்கப்படுகிறது. இதனை எவராலும் மறுக்க முடியாது. மத்தியில் இந்திரா காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் சரி, இல்லை எனில் ப.ஜக ஆட்சிக்கு வந்தாலும் சரி, இவர்கள் போன்ற சில சக்தி மிக்க அதிகாரிகளே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை நிர்ணயிக்கிறார்கள். இவர்கள் எப்போழுதும் சிங்களத்துக்கு சார்பான போக்கையே கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை நிலையாகும். இதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை இதுவரை திறக்காத இனம் மலையாள இனம். நீர் கடலுக்குச் சென்று கலந்தாலும் பரவாயில்லை தமிழர்களுக்கு போய் கிடைக்க கூடாது என்று நினைப்பவர்கள்.

இதற்காக நாம் ஒட்டுமொத்த மலையாள இனத்தையும் குறைகூறமுடியாது. ஆனால் அங்கே ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், இவ்வாறு ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள். தமிழர்கள் என்றால் எதிரிகளாப் பார்ப்பதுபோல ஒரு தோற்றத்தை அவர்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் சிங்களவர்களோடு இணைந்து செயல்பட விரும்புகிறார்கள். அடிப்படையில் இதனை அறிந்திராத சில ஞான சூனியங்கள், கேரளாவில் ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தப்படவேண்டும் எனவும், கேரள மலையாளிகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதராவ இருக்கவேண்டும் எனவும் சில ஊடகங்கள் ஊடாக பரப்புரை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இதன் பின்னணி என்ன என்பதனை நாம் நன்கு ஆராயவேண்டும். தமிழ் நாட்டில் உள்ள ஈழத் தமிழர் ஆதரவு தலைவர்களை ஒதுக்கிவிட்டு, மலையாளத் தலைவர்களோடு ஈழத் தமிழினம் கை குலுக்கவேண்டும் என்று சொல்லவருகிறார்களா இவர்கள் ? இவ்வகையான சேட்டைகளை றோ அமைப்பே தூண்டி விடும் நிலை காணப்படுகிறது. இதற்கு சில தமிழ் ஊடகங்களும் எழுத்தாளர்களும் உடந்தையாக இருக்கிறார்களா என்ற சந்தேகங்களும் எழுகிறது !

அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாக அல்லவா நிலை மாறிவிடும். தமிழ் நாடு என்பது ஈழத் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு பாரிய தளம். இத் தளத்தை நாம் வேறு மாநிலத்துக்கு மாற்ற முடியாது. ஆனால் அத் தளத்தில் இருந்துகொண்டு, பிற மாநிலங்களின் ஆதரவை பெற்று எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை நகர்த்த இயலும். இதனையே ஈழத் தமிழர்களும் பெரிதும் விரும்புவார்கள் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

அதிர்வுக்காக:

வல்லிபுரத்தான்


|    செய்தியை வாசித்தோர்: 29926

DMCA.com